பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

அணுவின் ஆக்கம்


கின்றது. புற்றுநோயல்லாத சில கழலைகளுக்கும் விழிக் கோளத்தின் சில புற்றுநோய்களுக்கும் கதிரியக்கக் கிளர்ச்சியுள்ள ஸ்ட்ரான்ஷியத்தைப்[1] பயன்படுத்துகின்றனர். கதிரியக்கப் பொட்டாசியம் மார்பிலுள்ள புற்றுநோய்க் கழலைகளைக் கண்டறியப் பயன்படுகின்றது.

கதிரியக்க அயோடின் சத்திரசிகிச்சை செய்யமுடியாத புற்றுநோய்களைக் குணப்படுத்துவதில் புதிய முறையில் கையாளப் பெறுகின்றது. ஆராய்ச்சியாளர்கள் கதிரியக்க "வழிகாட்டும் எறிபடைகளைக்" (guided missiles) கண்டறிந்துள்ளனர். இந்த எறிபடைகள் "எதிர்நச்சுக்கள்” (antibodies) என வழங்கப் பெறுகின்றன. எதிர் நச்சுக்கள் என்பவை புதிதாக உடலில் புகும் பொருள்களைத் தடுத்து நிறுத்துபவை. அம்முறை இவ்வாறு செயற்படுகின்றது: ஒரு சுண்டெலியின் சிறுநீரக இழையம் ஒர் எலியில் குத்திப் புகுத்தினால், எலியிடம் புதிய பொருளைத் தடுத்து நிறுத்தும் எதிர் நச்சு தோன்றுகிறது. எலியிடமிருந்து இந்த எதிர்நச்சுச் சாரத்தைப் பிசித்தெடுத்து அது கதிரியக்கமுள்ள ஒரு பொருளுடன் சேர்க்கப்பெறுகின்றது. இதன்பிறகு இந்த எதிர் நச்சினை சுண்டெலியிடம் குத்திப் புகுத்தினால் அது நேராக சுண்டெலியின் நீரகத்திற்குச் செல்லுகிறது ; அத்துடன் கதிரியக்கக் கிளர்ச்சியினையும் கொண்டு செல்லுகிறது.

பாலிசைத்தீமியா[2]  : குருதியில் ஒரு கன மில்லிமீட்டருக்கு ஐம்பது இலட்சம் வீதம் இருக்கவேண்டிய சிவப்பு அணுக்களுக்குமேல் மிகுதியாக அவ்வணுக்கள் பெருகுவதால் இந்நோய் தோன்றுகிறது. உடலில் சிவப்பு அணுக்கள் அதிகமாக இயற்றப்படுவதைத் தடுப்பதற்குப் பாஸ்வரத்தின் ஓரிடத்தான்களைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். நாம் உண்னும் உணவிலுள்ள பாஸ்வரம் உடலில் குருதியை இயற்றும் பகுதிகளுக்கு-அஃதாவது, எலும்புமச்சை[3] , மண்ணீரல்[4] , நிணநீர்ச் சுரப்பிகள்[5] ஆகியவற்-


  1. 53. ஸ்ட்ரான்ஷியம் -strantiurm.
  2. 54. பாலிஸைத்தீமியா. polycythemia.
  3. 55. எலும்பு மச்சை -bone marrow.
  4. 56. மண்ணீரல் -spleen.
  5. 57. நிணநீர்ச் சுரப்பிகள் -lymphatic glands