பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவத்துறையில் அணு

221


வகத்தில் இம்முறை கண்டறியப் பெற்றது. 'காஸ்மோ டிரான்' போன்ற அனுப்பிளக்கும் கருவிகளைப் பயன்படுத்தி புற்று நோய் ஆராய்ச்சி செய்யப் பெறுகின்றது. புரூக் ஹேவன் மருத்துவ நிலையத்திலுள்ள66 நோயாளிகளுக்கு போரான் - 10 முதலில் ஊசி குத்திப் புகுத்திய சிறிது நேரத்தில் அவர்கள் ஆய்வகத்திலுள்ள அணு உலையி லிருந்து வரும் பொது இயல் மின்னிகளுக்கு இலக்காக்கப்

மூளைப்பிளவை சிகிச்சை

படம் 34

1. கதிரியக்கப் பாஸ்வர அனுக்கள் கதிர்களை வீசுகின்றன. 2. கைகர் எண்.கருவி கதிர்களால் பாதிக்கப்பட்டு பிளவையின் இருப்பிடத்தைக் காட்டுகின்றது.

பெறுகின்றனர். போரான், பிளவையுள்ள இழையத்தில் செறிந்து திரண்டதும், பொது இயல் மின்னிகள் போரான் அணுக்களை இரண்டு சில்லுகளாகப் பிளவுறச் செய் கின்றன. ஒவ்வொரு சில்லுகளினின்றும் குறுகிய வீச்சுக் குட்பட்ட68 மிகத் தீவிரமான கதிரியக்கக் கிளர்ச்சி உண்டா கின்றது. கிளர்ச்சியின் எல்லை ஒரு மில்லி மீட்டருக்கும்


66புரூக்கேவன் தேசிய ஆய்வகம் — Brookhaven Nationa! Laboratory» 67சில்லுகள் - fragments. 68குறுகிய வீச்சுக்குட்பட்ட--short ranged.