பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவத்துறையில் அணு

225


தில் அமைந்த 850 இராத்தல் எடையுள்ள யுரேனியக் கவசம் கோபால்ட்டை மறைக்கின்றது. கோபால்ட்டி லிருந்து வெளிப்படும் தீவிரமான கதிர்களைத் தடுக்கப் பிற சிகிச்சை இயந்திரங்களில் காரீயக் கவசம் பயன்படுகிறது . ஆனால், இந்த யுரேனியக் கவசம் 3300 இராத்தல் எடையுள்ள காரீயக் கவசத்தின் வேலையைச் செய்யும். கட்

படம் 36 1. புற்று நோயின்மீது குவியும் கதிர்கள். 2. இயந்திரத்தை இயக்குபவர் திரவம் நிரம்பிய சாளரத்தின் வழியே கவனித்துச் சிகிச்சையை அடக்கியாள்கிறார், 3. காங்கிரீட் சுவர்.

புலனாகாத அணுக்கதிர் நோயாளியின் ஆரோக்கியமான இழையங்களில் மிகவும் பரந்துவிழும்; ஆனால், கோபால்ட்டு பகுதி சுழலும் வட்ட மையத்தில் பிளவை இருப்பதால், இதன் மீது கதிர்கள் குவிந்து விழுந்து கொண்டேயிருக்கும். இந்த முறையில் அதிகமாக விழும் நாசகரமான கதிர்கள் பிளவையிலுள்ள உயிரணுக்கள் மீது விழும். 1954-ஆம் ஆண்டில் இளவேனிற் காலத்தில் இந்த இயந்திரம் முதன் முதலாகப்

53-16