பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அணுவின் ஆக்கம்

SAMSMMSAMSMSMSMAMSMSMSMMAMAMAAASAAAA

பாதுகாப்பு முறைகள் : கதிரியக்கப் பொருள்களைக் கையாளும் மருத்துவ நிபுணர்களும் மருந்தகங்களிலும் மருத்துவ நிலையங்களிலும் பணியாற்றும் ஊழியர்களும் கதிர் வீசலுக்கு ஆளாகாமல் காக்கப் பெறுவது இன்றியமை யாதது ; நோயாளர்களைக் காணச் செல்வோரையும் கதிர் களுக்கு இலக்காகாமல் பாதுகாக்க வேண்டும். சிகாகோ பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த எட்டடிமாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்தில் இந்த எச்சரிக்கை ஏற்பாடுகள் மிக நன்ருகச் செய்யப் பெற்றுள்ளன. இந்: நிலையத்தில் புற்றுநோய் சிகிச்சை செய்யப்பெற்று வருகின் றது. இந்நிலையத்தை அமைப்பதற்கான பத்து இலட்சம் டால ருடன் அந்த நிலையத்தை நடத்தும் செலவையும் அமெரிக்க அணு ஆற்றல் குழு கொடுத்து உதவுகின்றது.

இந் நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்களும் நர்ஸ்களும் ஓர் அடையாளச் சீட்டு அணிகின்றனர். இதிலுள்ள ஓர் பிலிமைத் துலக்கி நாடோறும் அவர்கள் எவ்வளவு கதிர் வீசலுக்கு இலக்காயினர் என்பதைக்கண்டறிந்து கணக்கில் பதியப் பெறுகின்றது. இந்த அளவுகளின் மொத்தம் அபாய எல்லையை மீருமலுள்ளதா என்பது கவனிக்கப் பெறுகின்றது. இவர்கள் சட்டையிலுள்ள ஊற்றுப் பேணு ' போன்ற டோஸி மீட்டர் ' என்ற கருவியைப் பார்த்து இந்த அள வினேக் கண்டு கொள்ளலாம். நிலைய ஊழியர்களும் பார்வை யாளர்களும் நிலையத்தை விட்டுச் செல்லுங்கால் ஏதேனும் அபாயகரமான கதிரியக்கமுள்ள பொருள்கள் அவர்கள் மீது ஒட்டியுள்ளனவா என்பதை அறியச் சோதிக்கப் பெறு: கின்றனர்.

புதிய கண்டுபிடிப்புக்கள் : கதிரியக்க ஓரிடத்தான்களைக் கொண்டு மூளையின் பக்கவாதம், வலிப்பு நோய், முத லிய பல நோய்களைப்பற்றியும், எண்டோகிரீன் சுரப்பிகள் பற்றியும் பல புதிய கருத்துக்களும் நூற்றுக் கணக்கான பிற

  • o osrstö più GL1@ - fountain pen. ** GLitera lối: Líf – dosimeter. * apārūjor Lássurăth - cerebral palsy.
  • 6u5ôủų GETä! - epilepsy.