பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

உழவுத்தொழிலும் அணுவும்



'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், என்று கூறினார் புரட்சிக்கவி பாரதி. ஒரு நாட்டின் உணவுப் பெருக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது உழவுத்தொழில். பிறதுறைகளில் கோடி கோடியாகப் பொருளைக் குவித்தாலும் எல்லோரும் இறுதியில் உணவுக்காக உழவனத்தான் எதிர் பார்த்து நிற்கவேண்டும். இதனே நன்குணர்ந்த வள்ளுவப் பெருந்தகை,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் ; அதனால்
உழந்தும் உழவே தலை[1]

என்று கூறினார், புறநானூற்றுப் புலவரும் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'[2] என்று சுட்டி யுரைத்தார். இதனே நன்கு உணர்ந்த அறிவியலறிஞர்கள் உழவுத் தொழிலில் தம்நாட்டத்தைச் செலுத்தி வருகின்றனர். அமெரிக்க அணுவாற்றல் குழு ஆண்டுதோறும் இத்துறை ஆராய்ச்சிக்குக் கோடிக் கணக்கான டாலர் செலவிட்டு வருகின்றது. அணுவாற்றலின் துணையால் சிறந்த பயிர் வகைகளைக் கண்டறியவும், பயிர்களைச் சிறந்தமுறையில் வளர்த்து


  1. 1 குறள்-1031
  2. 2 புறம்-18