பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுத்தொழிலும் அணுவும் 23 f

அதிகமாகப் பலன்தரவும், பயிர்களைப் பீடித்துவரும் பூச்சி களையும் பயிர்நோய்களையும் ஒழிக்கக்கூடிய வழிவகைகளைக் காணவும் ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். ஒளிச் சேர்க்கை என்ற இயற்கையின் இரகசியத்தால் தாவரங்கள் உணவுகளைத்துஆன் உண்டாக்கிக்கொள்ளும் துறையிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தி அதன் நுட்பங்களை யெல் லாம் அறிந்து கொள்ள முனைந்திருக்கின்றனர். இந்த ஆராய்ச்சிகளிலெல்லாம் கதிரியக்க ஓரிடத்தான்கள் பெரும் பங்கு கொள்ளுகின்றன. அவை உழவுத் தொழிலைச் சிறந்த முறையில் நிறைந்த பயனே விளைவிக்கக் கூடிய அற்புதக் கலேயாக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவில் பூரூக்ஹேவன் ஆர்க்கான் ஓக் ரிட்ஜ்

ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிலையங்களில் அமைக் கப்பெற்றுள்ள அணுப்பண்ணைகளில் நடத்தப் பெற்று வரும் ஆராய்ச்சித் திட்டத்தில் அரசாங்கம் பெரும் பங்கு கொண்டுள்ளது. பெரிய கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங் களிலும், உழவுத் தொழில் ஆராய்ச்சி நிலையங்களிலும் கதிரியக்க ஓரிடத்தான்கள் உழவுத் தொழில் துறையில் எந்: தெந்த முறைகளில் பயன்படுத்தப் பெறுகின்றன என்பதை ஈண்டு காண்போம்.

உரமிடுதல் ஆராய்ச்சி : அண்மைக் காலம் வரையிலும் தாவரங்களின் வளர்ச்சி, பருமன், அவைதரும் பலன் ஆகிய வற்றைக் கொண்டே உரமிடுதலின் விளைவுகளை மக்கள் தீர் மானித்து வந்தனர். கதிரியக்க ஓரிடத்தான்களைக் கண் டறிந்த பிறகு இந்நிலை மாறிவிட்டது. அவற்றைக் கொண்டு பொருள் பொதிந்த புள்ளி விவரங்கள் முதன் முதலாகக் கண்டறியப் பெற்றுள்ளன ; எடுத்துக்காட்டாக, முதிர்ந்த தாவரங்களிலுள்ள பாஸ்வரச் சத்து மண்ணில் இயற்கையில் படிந்து கிடக்கும் பாஸ்பேட் உப்பிலிருந்து வந்ததா, அன்றி உழவர்கள் இடும் செயற்கை உரத்திலிருந்து வந்ததா என்பது நிர்ணயிக்கப் பெற்றது. கதிரியக்க ஓரிடத்தான்கள்

  • 4e5#GÐpsusốr–Brookhaven. “ shřāTsör- Argonne" stå fit-$-Oak Ridge.