பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/250

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

அணுவின் ஆக்கம்


இடுவது வீண் என்பதை உணர்ந்தனர். இந்த ஆராய்ச்சியால் உழவர்களுக்கு உரத்தினால் ஏற்பட்ட செலவு குறைந்தது ; உரமிடுதலில் சென்ற காலமும் உழைப்பும் மிஞ்சின. ஆனால், உருளைக் கிழங்கு சாகுபடியில் ஆய்வாளர்கள் இதற்கு முற்றிலும் மாறான உண்மையினைக் கண்டனர். உருளைக் கிழங்குத் தோட்டங்களில் இட்டுவரும் செயற்கை உரத்துடன் கதிரியக்கப் பாஸ்பேட் உப்பைக் கலந்து கைகர் எண்-கருவிகொண்டு உருளைக்கிழங்குச் செடியைக் கவனித்த பொழுது, கிழங்குகள் மண்ணில் உண்டாகிவரும்பொழுது செயற்கை உரத்திலிருந்து மண்ணுக்கும். அங்கிருந்து கிழங்குகளுக்கும் பாஸ்பேட் செல்லுவதை அறிந்தனர். எனவே, உருளைக்கிழங்குச் செடிகள் வளரும் பருவம் முழுவதும் பாஸ்பேட்டை ஏற்றுக் கொள்கின்றன என்பது தெரியவந்தது. உருளைக்கிழங்குச் சாகுபடி அதிகப் பலன்தர வேண்டுமானால், அதன் சாகுபடிக் காலம் முழுவதிலும் செயற்கை உரத்தை ஒழுங்காக இட்டுவருவது மிகவும் இன்றியமையாதது. உரத்தைப் பயன்படுத்தும் முறையறிந்து, அதனைப் பய ன் ப டு த் து ம் காலத்தையறிந்து, பயன்படுத்தினால் செயற்கை உரத்தில் செலவழியும் தொகையைக் குறைக் கலாம். வட கரோலின மாகாணக் கல்லூரியில் நடத்தப் பெற்ற ஆராய்ச்சித் திட்டத்தினால் சூப்பர் பாஸ்பேட்[1] என்ற உரத்தைப்போடுவதால் புகையிலைப் பயிருக்குச் சிறிதும் பயன் விளைவதில்லை என்பதை அறிந்து ஆண்டு தோறும் சுமார் 4000 டன் பாஸ்பேட் உரம் வீணாக்கப் பெறாமல் மிச்சப்படுத்தப் பெறுகின்றது.

உயிரியல் - மூல ஊட்டச் சத்துக்கள் : வேதியல் உரங்களில் பயன்படும் தாதுப் பொருள்களைத் தவிர, தாவரங்கள் மண்ணிலுள்ள[2]9கரிமப் பொருளிலிருந்தும்[3] ஊட்டத்தைப்;[4] பெறுகின்றன. உயிரியல் மூலங்கள் பற்றிய உர ஆராய்ச்சியினை அமெரிக்க அணு ஆற்றல் குழு மேற்கொண்டிருக்கின்றது. அரிஸோன பல்கலைக் கழகத்தினர் நடைமுறைச் சாகுபடிக்கு முன் நடைபெற்ற சாகுபடி எச்சங்களிலிருந்தும்


  1. 8 'சூப்பர் பாஸ்பேட்-super phosphate.'
  2. 9 மண் - soil
  3. 10கரிமப்பொருள்
  4. 11ஊட்டம்-nourishment