பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/251

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழவுத்தொழிலும் அணுவும்

235


புலத்திற்குப் பாயும் நீரின் மூலம் கொண்டுவரப் பெறும் பாசிகளிலிருந்தும் எவ்வளவு பாஸ்வரம் கிடைக்கின்றது என்று ஆராய்ந்து வருகின்றனர். விஸ்கான்சின் பல்கலைக் கழகம்[1] நிலத்திலுள்ள பாக்டீரியா[2] எவ்வாறு நைட்ரஜனை நிலத்ததாகச் செய்கிறது என்பதை ஓரிடத்தான் துலக்கி-யறி உக்திகளைக்[3]கொண்டு ஆராய்ந்து வருகின்றது.

நிலத்திலுள்ள நுண்ணிய உயிர்கள்[4] வாயு நிலையிலுள்ள நைட்ரஜனை “ நிலைத்த” நைட்ரஜனாக மாற்றுகின்றன என்பது நீண்ட நாட்களாக அனைவரும் அறிந்த செய்தி. இச்செயல் அவரைச் செடிகள், மொச்சைச் செடிகள், பட்டாணிச் செடிகள் போன்ற லெகியூம்[5] குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் வேர்களிலுள்ள முண்டுகளினுள்[6] பாக்டீரியாவால் நிறைவேற்றப்படுகின்றது. வேர் முண்டுகளிலுள்ள பாக்டீரியா புலத்திலுள்ள நைட்ரேட் உப்புக்களை எதிர் காலத்தில் பயிராகக் கூடிய தாவரங்களுக்கு ஊட்டம் தரும் நிமித்தம் உண்டாக்குகின்றன. ஒரே சாகுபடியில் ஏக்கருக்கு 400 இராத்தல் வீதம் தயார் செய்து விடுகிறது. என்று சொல்லுகின்றனர். இவ்வாறு தயார்செய்த “நிலைத்த” தன்மையையுடைய நைட்ரஜன் உடனே தாவரங்களுக்குக் கிடைப்பதில்லை. லெகியூம் குடும்பத்தைச் சாராத பிற தாவரங்களுக்கு-எடுத்துக்காட்டாக, கோதுமைக்கு-இந்த நைட்ரஜனை எவ்வாறு அதிகமாகக் கிடைக்கச்செய்வது என்பதுதான் விஸ்கான்லினிலுள்ள ஆய்வாளர்களின் பிரச்சினை. கோதுமை போன்ற தாவரங்களுக்கு நைட்ரஜன் ஏராளமாகத்தேவை. பாக்டீரியாவுக்கும் வேர்முண்டுகளுக்குமுள்ள உறவு முறைகளைப்பற்றி அதிகம் அறிந்தால் மேற்குறிப்பிட்ட செயலே முற்றுவிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று அவர்கள் கருதுகின்றனர். இத்துறை ஆராய்ச்சியில் பயனுள்ளமுடிவுகளைக் கண்டு விட்டனர் என்றும் கூறலாம்.


  1. 12விஸ்கான்சின் பல்கலைக்கழகம் - University of Wisconsin
  2. 13 நிலத்திலுள்ள பாக்டீரியா -soil bacteria
  3. 14துலக்கி-யறி உக்திகள் - tracer techniques.
  4. 15 நுண்ணிய உயிர்கள் - microbes.
  5. 16 லெகியூம் - legume
  6. 17முண்டு-nodules