பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多数8 அணுவின் ஆக்கம்

ஒளிச் சேர்க்கை : ஒளிச்சேர்க்கை இயற்கையில் நடை பெறும் ஓர் அற்புத நிகழ்ச்சி. தாவரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயுவையும் வேர்களின்மூலம் பெறும் நீரையும் உட்கொண்டும் கதிரவன், ஒளிக்கதிர்களாகவும் வெப்பக் கதிர்களாகவும் உமிழும் ஆற்றலைத் துணைகொண்டும் கார்போஹைட்ரேட்டுகள் " பிசிதங்கள் ' கொழுப்புக்கள்’ போன்ற பொருள்களைச் சேமித்து வைக்கும் நிகழ்ச்சியை ஒளிச்சேர்க்கை என்று வழங்குவர். தாவரங்கள் சூரிய ஒளி கொண்டே வாழ்கின்றன என்பதை யாவரும் அறிவர். அவை கதிரவனிடமிருந்து ஒளியையும், சூட்டையும் நேரே விழுங்குகின்றன. இந்த உலகில் தாவரங்களேத் தவிர வேறு எந்தப் பொருள்களும் கதிரவனிடமிருந்து நேரடியாக ஆற் றஃப் பெறும் திறன் பெறவில்லை. மனிதன் உட்பட விலங்கு, பறவை முதலிய பிராணிகள் யாவும் நேராகக் கதிரவன் காலும் சூட்டையும் ஒளியையும் விழுங்காமல் அவற்றை விழுங்கிய தாவரங்களை விழுங்கிக் கதிரவனின் ஆற்றலைப் பெறுகின்றன. புலி, சிங்கம் போன்ற புலாலுண்ணும் விலங் குகளோ சூரிய ஆற்றலை நேரே விழுங்குவதுமில்லை ; தாவரங் கள் உண்டாக்கும் பொருள்களையும் விழுங்குவதில்லை. அவை பயிருண்ணும் விலங்குகளைக் கொன்று தின்கின்றன என்ருலும், அவற்றிற்கும் ஆற்றல் கதிரவனிடமிருந்து தான் கிடைக்கின்றது என்பது இச்சங்கிலித் தொடர் நிகழ்ச்சிக ளால் அறியக் கிடக்கின்றதன்ருே ? எனவே, இப்புவியி லுள்ள உயிர்வாழ் பிராணிகள் அனைத்தும் பகலோனிட மிருந்தே ஆற்றலேப் பெறுகின்றன என்பதை வெள்ளிடை மலே என அறிகின் ருேம்.

தாவரங்கள் வெய்யோன் ஆற்றலே விழுங்குவ தெங் ங்ணம் ? சிறுவன் ஒருவன் தோட்டத்தில் பள்ளம் தோன்றி விதையொன்றினைப் புதைத்துத் தண்ணிர்ஊற்றிக்கொண்டே வருகிருன். நாள்தோறும் தான் அருமையாகப் பேணிவரும்

19 ஒளிச்சேர்க்கை - photosynthesis, ' கரியமிலவாயு - carbon-dioxide. * 3ritéLifsogypt: Girl-Gassir - carbohydrates: “ Listãsäisisir - proteins. ** Garggiliųšssir - fats.