பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுத்தொழிலும் அணுவும் 露総7°

தோட்டத்தைப் பிரியமாகப் போய்ப் பார்க்கிருன். ஒருநாள் அவ்விதை பச்சைப் பசேல் என்று முளைவிட்டு அம்முளே தரைக்குமேல் எழுந்து கதிரவனே நோக்குகிறது. இது தரையை வெடித்துக்கொண்டு வெளி வருவதற்கும் கதிர வனே நோக்குவதற்கும் காரணம் என்ன ? இருட்டறையில் சாளரத்திற்கு அருகே வைக்கப் பெற்றிருக்கும் செடியும் வளைந்து சாளரத்தின் வழியே தலையை நீட்டிச் சூரியன நோக்கி வளர்கிறது. பூந்தொட்டியிலுள்ள செடியைத் தலை கீழாகச்சாய்த்து வைத்தாலும் செடிவளைந்து எழுந்து வானே நோக்கியே வளர்கின்றது. கதிரவனிடமிருந்து வரும் ஆற்றல் தம் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை ஒரறி வுடைய தாவரங்களும் அறிந்து வாழ்கின்றன. தாவரங்கள் வளர வளர அவை கதிரவன் சூட்டையும் ஒளியையும் வாரி வாரி விழுங்கித் தம்முளே அடக்கிக் கொள்கின்றன. நாம் உண்ணும் உணவு வேதியல் மாற்றம் பெற்றுக் குருதியில்" கலப்பதுபோலவே, கதிரவனின் ஆற்றலும் தாவரங்களின் ஒவ்வோர் அணுவிலும் அடங்கிக் கிடக்கின்றது. மண்ணி லிருந்தும் காற்றிலிருந்தும் உட்கொள்ளும் பொருள்களைக் கொண்டு தாவரங்கள் தம் உறுப்புக்களின் அணுத்திரளை களே அமைத்துக்கொள்ளக் கதிரவனின் ஆற்றல் தேவைப் படுகின்றது. அதுபற்றியே, தாவரங்கள் கதிரவனின் ஆற்றலை உட்கொள்ளுகின்றன.

ஒளிச் சேர்க்கை உண்ணும் உணவையும் எரியும் விறகு, வகைகளையும் தருவதோடன்றி வேருெரு நன்மையையும் விளைவிக்கின்றது. காற்றிலுள்ள உயிரியத்தின் அளவு குறையாதும் அது காத்துவருகிறது. ஒவ்வொரு விடிையிலும் உயிர் வாழிகள் மூச்சு விடுவதாலும், எரிதல் நிகழ்வதாலும் வாயு மண்டலத்திலுள்ள உயிரியம் குறைந்து கரியமிலவாயு மிகுகின்றது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கையில் கரியமில வாயுவிலுள்ள கார்பன் ஏற்றுக்கொள்ளப்பெற்று உயிரியம் விடுவிக்கப் பெறுகின்றது; காற்றில் கணந்தோறும் உயிரியம் நிறைவு செய்யப்பட்டு வருகிறது.

  • @(Bä - blood.