பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

அணுவின் ஆக்கம்


 என்பது உறுதிப்படுகின்றது. இவ்வாறு தாவரங்கள் தயாரிக்கும் கதிரியக்கப் பொருள்களைப் பிரித்தெடுத்து, தூய்மைப்படுத்தி வழி-துலக்கிகளாகப் பயன்படுத்தப் பெறுகின்றன. (படம்-39). பெரும்பாலும் அவை மருத்துவத் துறையிலும் சத்துணவு ஆராய்ச்சியிலும் பயன்படுகின்றன. இந்த ஆராய்ச்சி இன்று அமெரிக்காவில் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது.

ஒளிச்சேர்க்கை ஆராய்ச்சி முதன் முதலாக கலிபோர்னியா[1] பல்கலைக்கழகக் கதிரியக்க ஆய்வகத்தில் தொடங்கப்பெற்றது. அங்குள்ள சுழலினியில் கதிரியக்கக் கார்பன் -11-ம் கார்பன்-14-ம் உண்டாக்கப்பெற்றன. கார்பன் உயிர் வேதியல் கிரியை ஒவ்வொன்றிலும் பங்கு கொள்கிறது.தாவரங்களும் சாதாரண கார்பனைப் பயன்படுத்துவதைப் போலவே, கதிரியக்கக் கார்பனையும் பயன்படுத்துகின்றன. கார்பன்-14ன் அரை-வாழ்வு 5900 ஆண்டுகளாக இருப்பதால் அது ஒளிச்சேர்க்கை ஆராய்ச்சியில் சிறந்ததொரு ஆராய்ச்சிச் சாதனமாக அமைகின்றது. சுழலினியில் முதன் முதலாக உண்டாக்கப் பெற்றபொழுது இது அரிதாகவும் இருந்தது; விலையும் அதிகமாக இருந்தது. ஆனால், இது போரின் இறுதிக் காலத்திலிருந்தே ஓக் ரிட்ஜ் என்ற இடத்திலுள்ள அணு உலையிலிருந்து அதிகமாக உற்பத்தி செய்யப் பெறுவதால் மலிவாகக் கிடைக்கின்றது.

இந்த ஆராய்ச்சியில் கரியமில வாயுவிலிருந்து சர்க்கரையும்[2] மாப்பொருளும்[3] உண்டாவதற்கு முன் எந்த வேதியல் இயைபுப் பொருள்களில் கதிரியக்கக் கார்பன் இருக்கிறது என்பதை ஆராய்ந்தனர். தொடக்கத்தில் மிகச் சிக்கலான அமைப்பைக் கொண்ட இலைகளை எடுத்துக் கொள்ளாமல் பாசிவகைகளைச்[4] சேர்ந்த குளோரெல்லா[5] என்ற ஒற்றை உயிரணுக்களைக் கொண்ட பச்சைத் தாவரங்கள் மேற்கொள்ளப் பெற்றன. இந்த உயிரணுக்கள் விரைந்து


  1. 29கலிபோர்னியா
  2. 30 சர்க்கரை – sugar
  3. 31மாப்பொருள்-starch
  4. 32பாசிவகைகள் - species of algae
  5. 33 குளோரெல்லா - chlorella