பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழவுத்தொழிலும் அணுவும்

245


செயலாற்றுகின்றன. கதிரியக்கக் கரியமிலவாயுவில் ஒரு நிமிடம் வைத்திருந்தால் அவற்றில் தனித் தனியாக ஐம்பது சேர்க்கைப் பொருள்கள் உண்டாகின்றன ; இவை ஒவ்வொன்றிலும் கதிரியக்கக் கார்பன் இருக்கின்றது. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மிகச் சிக்கலான பிசிதங்களிலும் கொழுப்புக்களிலும் கூட வாயுமண்டலத்திலிருந்து பெற்ற புதிய கார்பன் காணப் பெறுகின்றது. இத்தாவரங்களை ஒன்று அல்லது இரண்டு வினாடிகள் மட்டிலும் கதிரியக்கக் கரியமில வாயுவிலும் கதிரவன் ஒளியிலும் வைத்தால், புதிய கார்பனைக் கொண்டே இரண்டு அல்லது மூன்று சேர்க்கைப் பொருள்கள்தாம் உண்டாகின்றன. இவை மிகச் சிக்கலான பாஸ்போகிளிசெரிக் அமிலங்களாக[1] மாறுகின்றன. பச்சை உயிரணுக்களிலுள்ள இவை காற்றிலுள்ள கரியமில வாயுவையும் ஒளியிலுள்ள ஆற்றலையும் இலைப்பச்சையம்[2] ஏற்றுக்கொள்ளத் துணை செய்கின்றன. இதுகாறும் இவ்வளவுதான் அறியப் பெற்றுள்ளது. கரியமில வாயுவிலிருந்து உயிரியம் எவ்வாறு விடுவிக்கப் பெறுகின்றது என்பதும், கார்பன் எவ்வாறு தாவர வளர்ச்சிக்குப் பயன்படுகிறது என்பதும் இன்னும் அறியக்கூடவில்லை. படிப்படியாக இந்த எளிய - ஆனால் சிக்கலான - எதிர்வினை பகுத்துப் பார்க்கப்[3] பெற்று வருகின்றது. என்றாவது ஒருநாள், இது தெளிவாகப் புலனாகித்தான் தீரவேண்டும். மிக விரைவில் கதிரியக்கக் கார்பன் முழுக் கதையையும் வெளிப்படுத்தத்தான் செய்யும்.

உயர்வகைத் தாவரங்கள் : கதிரியக்கக் கிளர்ச்சியைப் பயன்படுத்தி வியத்தகு ஆராய்ச்சிகள் செய்யப்பெற்றுள்ளன. சிலவகைக் கதிர்களால் உயிரினங்களில் சிலவகை மாறுதல்கள் ஏற்படுகின்றன என்றும், அவை குடிவழியாக இறங்கக் கூடியவை என்றும் அறிவியலறிஞர்கள் நீண்ட நாட்களாகவே அறிந்திருந்தனர். இம்மாறுபாடுகளைச் 'சடுதி மாற்-


  1. 34பாஸ்போகிளிசெரிக் அமிலங்கள் - phosphoglyceric acids.
  2. 35இலைப்பச்சையம் - chlorophyll.
  3. 36பகுத்துப் பார்- analyse.