பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/262

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

அணுவின் ஆக்கம்


றங்கள்[1] என்று குறிப்பிடுவர். புரூக்ஹேவன் தேசீய ஆராய்ச்சி நிலையத்தில் ஒட்ஸ் என்ற ஒருவகைத் தானியத்தில் பொது இயல் மின்னிகளைச் செலுத்திப் பயிர் செய்து துருநோய்[2] என்ற ஒருவகைத் தாவர நோயினால் பாதிக்கப் பெறாத புதுவகை ஒட்ஸைப் படைத்துள்ளனர். இவ்வகைத் தானியத்தை உண்டாக்க ஒன்றரை ஆண்டுகள் ஆயின. பழைய பயிரிடு முறைகளைக் கையாண்டு இத்தகைய விதையை உண்டாக்க முயன்றிருந்தால் குறைந்தது பத்து ஆண்டுக் காலமும், அதிகச் செலவும் ஆயிருக்கும். பிளாரிடா[3] மாகாணத்தில் குளிர் காலத்தில் இலைகளை அழிக்கும் ஒருவகை நோயினால் பயிர்கள் பாதிக்கப் பெறுகின்றன. இதனால் ஆண்டுதோறும் சுமார் 25,000 ஏக்கரிலுள்ள பயிர்களில் கிருமி நாசமருந்து தெளிக்க வேண்டியுள்ளது. இந்த நோயினால் தாக்கப் பெறாத தானிய வகையாக இருந்தால் இவ்வளவு செலவில் மருந்துதெளித்தலை மேற்கொள்ள வேண்டியதில்லை.

கோடையில் புரூக் ஹேவனில் தானிய விதைகளின் மீது அணுக்கதிர்களை வீசச்செய்து அடுத்த குளிர் காலத்தில் இந்த விதைகள் பிளாரிடாவில் பயிர் செய்யப் பெறுகின்றன. எனவே, ஓராண்டிற்குள் விதைகளுக்கு நோயை எதிர்க்கும் ஆற்றல் ஏற்பட்டிருக்கின்றதா என்பதைச் சோதித்துவிட முடிகிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்ற சடுதி மாற்றங்கள் இயற்கையில் மெதுவாகவே ஏற்படுகின்றன. அணுக்கதிர் வீசலால் இம்மாற்றங்களே விரைவில் ஏற்படுத்த முடிகின்றது.

சடுதி மாற்றங்களினால் அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய வகைத் தாவரங்களையும் உண்டாக்க முடியும். அமெரிக்காவில் ஏக்கருக்கு 30 சதவீதம் அதிகமாக விளைச்சல் தரக்கூடிய ஒரு வகைக் கடலை[4] உற்பத்தி செய்யப்பெற்றுள்ளது; இயந்திரங்களால் அறுவடை செய்யக்கூடிய அளவுள்ள பருமனும் வடிவமும் உடைய மற்றொரு வகைக்


  1. 37சடுதி மாற்றங்கள் - mutations.
  2. 38 துருநோய் - rust
  3. 39 பிளாரிடா - Florida.
  4. 40 கடலை -peanut