பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多令& அணுவின் ஆக்கம்

SAASAASAASAAAS

யக்கூடும். 10 ஏக்கர் பரப்புடைய ஒரு தோட்டத்தின் நடுவில் அணுக்கதிர் வீசும் பொருளே அமைத்து அங்கு வளரும் பலவகை மரங்கள், செடிகள், கொடிகள் மீது அணுக்கதிர்களை விழச் செய்கின்றனர். விசித்திரமான பழங்கள் உண்டான கிளைகளை வெட்டிச் சாதாரணமான தாவரங்களுடன் ஒட்டுதல் முறையால் ' இணைத்து விடுவர்.

நுட்பமான தாவரங்களான காளான் போன்றவைகளில் ஏற்படும் மாறுபாடுகளும் மனிதருக்கு உதவக் கூடும். இன்று தயாராகும் பென்ஸிலின் ' என்ற மருந்தில் பெரும் பகுதி ஒரு சிறந்த வகைக் காளானிலிருந்து உண்டாக்கப் பெறுகின்றது. இந்தக் காளான்வகை அணுக்கதிர்களால் சடுதி மாற்றம் அடைந்த ஒருவகை உயிராகும். இவ்வாறு செயற்கை முறையில் தாவர மாறுபாடுகளைச் செய்தல் உழவுத் துறையில் ஒரு புது யுகத்தைத் தொடங்குகிறது. இந்த முறையில் புதிய சிறந்த வகைத் தாவரங்களைப் படைக்கக் கூடுமென நம்பவும் இடம் உண்டு.

தாவர நோய்கள்பற்றிய ஆராய்ச்சி : கடந்த ஒரு சில ஆண்டுகளாக தாவரங்களுக்கு ஏற்படும் நோய்கள்பற்றியும், பைங்கூழ் வளர்ச்சிக்குத் தடையாகவிருக்கும் களைகளே அழித்தல்பற்றியும், தாவரங்களுக்குப் பூச்சிகளால் நேரிடும் அழிவுபற்றியும் ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த ஆராய்ச்சியில் கதிரியக்க ஓரிடத்தான்கள் பெரிதும் பயன் படுகின்றன. பயிர்களுக்கு நேரிடும் நோய்கள் முதலிய வற்ருல் உழவர்களுக்குப் பெரிய அளவில் சாகுபடியில் நஷ் உம் உண்டாகிறது. பொடிகள், திரவங்கள் வடிவத்திலுள்ள ஒரு சில பூச்சிக் கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இத்தகைய இழப்பைக் குறைக்கலாமெனினும், அதைக் கட்டுப்படுத்துவதற்கு சதா ஏதாவது அபிவிருத்தித் திட் உங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கவேண்டியுள்ளது. சில நோய்களிேயும் பூச்சிகளையும் நச்சு மருந்துக்கள் ஒன்றும் செய்வதில்லை; அவற்றை எதிர்த்து நிற்கும் ஆற்றல்

“ St.-Gģ5śb ipsop - grafting. “ Gusir Grosßgör - pencillin.