பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுத்தொழிலும் அணுவும் &49

அவற்றிடம் அமைந்துள்ளது. களை களைக் கொல்லும் திறனும் வேதியற் பொருள்களிடம் ஒரளவுதான் அமைந் துள்ளது. பூச்சிகளைக் கொல்லும் மருந்துக் கலப்பின் வேதியல் அமைப்பில் கதிரியக்க ஓரிடத்தான்களைப் பயன் படுத்தி, அம்மருந்துக்களின் அடிப்படைச் செயலேயும், அவற்றின் நன்மைகளையும் பயன்படும் எல்லைகளையும்பற்றிய தெளிவான அறிவை ஆய்வாளர்கள் பெறுகின்றனர். அம் மருந்துக்கள் மிகக் குறைவான அடர்வில் பயன்படுத்தப் பெறுவதால் அவற்றை வேறு முறைகளில் துப்பறிவதில் கஷ்டம் ; முடியாதென்றே சொல்லலாம். கதிரியக்க ஓரிடத் தான்கள் இதற்குப் பிரத்தியேகமாகப் பயன்படுகின்றன.

களைகளே அழிக்கும் மருந்துக்கள் யாவும் வேதியற் பொருள்களே. அவை குறுகிய இலைகளையுடைய புற்களுக் குத் தீங்கு பயவாமல் அகன்ற இலகளையுடைய களைகளே மட்டிலும் அழிக்கின்றன. தானியங்களே " விளைவிக்கும் தாவரங்கள் யாவும் குறுகிய இலைகளையுடையவை. அகன்ற இலைகளையுடைய த | வ ர ங் க ள் அழிவதற்கும், குறுகிய இலகளையுடையவை தீங்கின்றி இருப்பதற்கும் இப்பொழுது காரணம் கண்டறியப்பெற்றுள்ளது. அகன்ற இலைகளில் மருந்துக்கள் பட்டதும் அவை இலைகளால் விரைவாக உட் கிரகிக்கப் பெறுகின்றன ; இரண்டு மணிநேரத்திற்குள் தாவரங்களின் எல்லாப் பகுதிகளுக்கும் அவை ஊடுருவிச் செல்கின்றன. ஆளுல், குறுகிய இலைகளேயுடைய தாவரங் களில் அவை பட்ட இடங்களில் அப்படியே தங்கி விடுகின் றன ; அதற்குமேல்-சிறிதும் நகர்வதில்லை. இன்னும் சில பூச்சிக் கொல்லிகள் தாவரங்களின்மீது துளிகளாகப் பீச்சப் பெற்றதும் அவை தாவரங்களின் சாறுகளே உறிஞ்சும் பூச்சி களைக் கொல்லுகின்றன. கதிரியக்க ஓரிடத்தான் ஆராய்ச்சி களால் இந்தப் பூச்சிக் கொல்லிகள் பகற்காலத்தில் தாவர இலைகளால் உட்கிரகிக்கப் பெறுகின்றன என்றும், அதுவும் இலைகளின் அடிப்புறங்களில் அவ்வாறு கிரகிக்கப் பெறு கின்றன என்றும் அறியக் கிடக்கின்றன.

    • soil-ffs; - concentration. “ firgofusā āsir - cereals.