பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழவுத்தொழிலும் அணுவும்

251


கால்நடைப் பண்ணை முதலியவை: உழவர்களுக்குப் பல விதங்களில் உறுதுணையாக இருப்பவை கால் நடைப் பண்ணை, கோழிப்பண்ணை முதலியவை. பிராணிகளின் மீது கதிரியக்க ஓரிடத்தான்களைப் பயன்படுத்திச் செய்யப்பெறும் சில சோதனைகள் உணவு உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. எடுத்துக்காட்டாக ஓக் ரிட்ஜ் என்னுமிடத்தில் ஓர் அறிவியலறிஞர் கோழிகள் முட்டையிடுவதைப்பற்றி ஆராய்ந்தார், கதிரியக்கமுள்ள உணவு கோழிகளுக்கு ஊட்டப்பெற்றது. இதில் ஒரு பகுதி சுமார் நாற்பது நாட்களுக்குப் பிறகு இடப்பெற்ற முட்டைகளில் காணப்பெற்றது. கோழியின் வயிற்றில் முட்டை உண்டாவதற்குச் சுமார் எட்டு நாட்கள் தாம் ஆகின்றன. ஆனால். மேற்கூறப்பெற்ற சோதனையிலிருந்து சுமார் ஒரு மாதத்திற்குமுன் ஊட்டப் பெற்ற உணவின் பகுதி இப்பொழுது உண்டாகும் முட்டையில் அமையக்கூடுமெனத் தெரிகின்றது. முட்டைகள் எவ்வாறு உண்டாகின்றன என்பதைப்பற்றி அறிவியல் அறிஞர்கள் காணும் முடிவு கோழி முட்டைகளின் உற்பத்தியைப் பெருக்குவதற்குத் துணை புரியக் கூடும். என்று நம்பப் பெறுகின்றது.

பன்றிகளையும் கோழிகளையும் கொழுக்க வைக்கும் ஒரு புதிய மருந்து கண்டறியப்பெற்றிருக்கின்றது. இந்த மருந்தினை உண்ட பன்றிகளின் புரிசைச் சுரப்பிகள்[1] மந்தமடைந்து குறைந்த வேகத்துடன் இயங்குகின்றன. இதனால் பன்றிகள் வழக்கமாக உண்ணும் அளவு உணவையே உண்டபோதிலும் விரைவாகவும் கொழுப்பாகவும் வளர்கின்றன. இந்த மருந்தினை உண்ட பன்றிகளின் இறைச்சியிலும் கோழிகளின் முட்டையிலும் இந்த மருந்து இல்லையென சோதனைகள் மூலம் உறுதிப்பட்டது. ஆகவே, பண்ணையாளர்கள் இம்மருந்தினைப் பயன்படுத்தி பன்றிகளையும் கோழிகளையும் கொழுக்க வைக்கின்றனர். இங்ஙனமே, பசுக்களின் புரிசைச் சுரப்பிகளை 9 மந்தமாக இயங்கச் செய்வதற்கு மற்றொரு வகை மருந்தினைக் கண்டறிந்துள்ளனர். இதனை உண்ட பசுக்கள் மந்தமான இயல்பை


  1. புரிசைச் சுரப்பி - thyroid gland.