பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுத்தொழிலும் அணுவும் 253

கால் நடைகளிடம் சோகை போன்ற ஒரு தோய் ஏற்பட்டது. இந்த நோய் கால்நடைகள் மேயும் வயல்களின் மண்ணில் உள்ள ஏதோ ஒருவித வேதியற் பொருளால் அதிகமாகி வந்தது என்பது அறிவியலறிஞர்களுக்கு உறுதி யாய்த் தெரிந்தது. அங்குள்ள வேதியற் பொருள் ஒவ் வொன்றையும் கொண்டு சோதனைகள் நடத்தினர். அவை செல்லும் வழிகளே கதிரியக்க ஓரிடத்தான்களால் துலக்கிக் கண்டனர். மண்ணில் உள்ள கோபால்ட்டு கால்நடைகள் தின்னும் புல்லின் வழியாக அவைகளினுள் சென்று இந்த நோயை விளைவித்தது என்பதை அவர்கள் அறிந்தனர்; அந்த வேதியற் பொருள் கால்நடையை எவ்வாறு தாக்கி நோயுறச் செய்தது என்பதை அவர்கள் நன்கு விளங்கிக் கொண்ட னர். இதன் பயணுக அந்நோய் தோன்ருமல் இருக்க ஒரு தடைமுறையும், நோய்க்கு ஒரு சிகிச்சை முறையும் கண்டறியப் பெற்றன.

இலவலேசத் தனிமங்கள் : நுண் சத்துப் பொருள்கள் " என்பவை தாவரங்களுக்கும் பிராணிகளுக்கும் ஊட்டம் அளிக்கும் தனிமங்கள். அவற்றின் வளர்ச்சிக்கு இவை மிகச் சிறிய அளவுகளில் (இலவலேச) தேவைப்படுகின்றன. இலவல்ேசத் தனிமங்கள் என்ற சொற்ருெடர் இத்தேவை யைக் குறிக்கின்றது; இத்தொடர் ஊட்டத் துறையைச் சார்ந்த ஒரு கலைச்சொல்லே யன்றி வேருென்றுமல்ல. நுண் சத்துப் பொருள்கள்தாம் இலவலேசத் தனிமங்கள் என்று வழங்கப் பெறுகின்றன. அயம்", தாமிரம் , மாங்கனீஸ் ", போரன் ", மாலிப்டினம் ', கோபால்ட்டு , அயோடின்", துத்ததாகம் ஆகியவை இலவலேசத் தனிமங்களாக உள்ளன என்று கண்டறிந்திருக்கின்றனர். சில தாவரங்

  • சோகை - anaemia * நுண் சத்துப் பொருள்கள் -

micro nutrients. * இலவலேசத் தனிமங்கள் - traceelements. * south-iron. " FTufirih - copper. "lor:# கனிஸ் - manganese. ” போரன் - boron. ” மாலிப்டினம்

molybdenum. * GäTLIróði (5 – cobalt. ” so Gurio 65r - iodine. “gift;557&th - zinc.