பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழவுத்தொழிலும்.அணுவும் 255

சீமைத்தக்காளி நாற்றுக்களிலுள்ள செடிகளில் துத்த நாகக் கதிர் இயக்க ஓரிடத்தான்களே. ஊசி குத்திப் புகுத் தினர்கள். அந்த நாற்றுக்கள் சில அங்குல உயரம் இருக் கும்பொழுது அவற்றில் துத்தநாகம் பரவியிருந்த இடத்தைக் கைகர் எண்-கருவியால் துலக்கி அறிந்தார்கள். சில நாட்களில் அச்செடிகள் முழு வளர்ச்சியினே எய்தியதும் செடிகளின் கிளைகள், இலைகள், தண்டுகள் முதலிய ஒவ்வொரு பகுதியிலும் கைகர் எண்-கருவியை நகர்த்தி அக்கருவியின் "கிளிக் ஒசையால் துத்தநாகத்தின் இருப்பை அறிந்தனர். இறுதியாக தக்காளிச் செடிகள் பூத்துக் காய்த் துப் பழுத்துக் கனிகளை ஈந்தன. அந்தக் கனிகளில் எண் கருவியை வைத்துப் பார்த்தபொழுது கிளிக் ஓசை கேட் டது. கனிகளிலும் செடிகளில் குத்திப் புகுத்திய கதிரியக்கத் துத்தநாகம் இருக்கிறது. எனவே, சீமைத் தக்காளிப் பழத்தில் துத்தநாகம் இருக்கிறது என்றும், அது பழுப்பதற் குத் துத்தநாகம் இன்றியமையாதது என்றும் அறிகின்ருேம். துத்தநாகம் அளிக்கப்பெருத சீமைத் தக்காளிச் செடிகளைக் கவனித்தபொழுது அவை சிறந்த முறையில் கனிகளைக் கொடுக்கவில்லை என்பதும், அவை ஈந்த கனிகளிலும் சிறந்த ஊட்டச் சத்துக்கள் இல்லை என்பதும் தெரியவந்தன.

இலவலேசத் தனிமங்கள் இருக்கவேண்டிய அளவில் சிறிது குறைந்தாலும் தாவரங்கள் அதனே உடனே காட்டி விடும். இதனை மாக்கால்லம் பிராட்டு ஆராய்ச்சி நிலையத் தில் ' முதன்முதலில் கண்டறிந்தனர். தாவரங்கள் தம் வளர்ச்சிக்கு வேண்டிய இலவலேசத் தனிமங்களில் போதிய அளவு கிடைக்காவிட்டால் அவை வாடி நிறம் மாறிப் பட்டுப் போகின்றன. மூன்று சீமைத் தக்காளிச் செடிகளைப் பாது காப்பாகக் கட்டுப்படுத்தப் பெற்ற சூழ்நிலைக்கு உள்ளாக் கினர். முதல் செடியைத் துத்தநாகம் குறைவாகவுள்ள மண்ணில் நட்டனர். அது குன்றிக் குறுகி வளர்ந்தது. இரண்டாம் செடிக்கு சுமாரான அளவு துத்தநாகத்தை

  • மாக்கால்லம் பிராட்டு ஆராய்ச்சி நிலையம்.Mic, CollumPratt Institute.