பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

அணுவின் ஆக்கம்



இரண்டாவது வகை, பின்னோக்கிச் சிதறும் கனம் அளக்கும் கருவி என்பது. இதில் கதிர்வீச்சின் மூலமும், அயனியாக்கும் அறையும் ஒரே பக்கத்தில் அமைக்கப் பெற்றுள்ளன ; அஃதாவது, இரண்டும் அளக்கப்பெறும் பொருள் இருக்கும் அதே பக்கத்திலேயே இருக்கின்றன. இதில் மீளும் கதிர்வீச்சின்[1] தீவிரமே அளக்கப் பெறுகின்றது. கதிர்வீச்சு மூலம் நன்றாக மூடப்பெற்று தகட்டை மோதும் கதிர்வீச்சு மட்டிலும் பிரதிபலிக்குமாறு (மீளுமாறு)[2] அமைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு மீளும் கதிர்வீச்சுதான் அயனி அறையால் ஏற்றுக்கொள்ளப் பெறுகின்றது. பெரும்பாலும் இவ்வகைக் கருவி ஒரு தகட்டின் மீது பூச்சாகப் போடப்பெற்றுள்ள பொருளின் கனத்தை அளவிடுவதற்குப் பயன்படுகின்றது. அமெரிக்காவில் பெரும்பாலும் இக்கருவிகளில் கதிரியக்க ஸ்ட்ரான்ஷியமே[3] கதிர்வீச்சு மூலமாகப் பயன்படுகின்றது. அளக்கப்பெறும் பொருள்களின் கனத்திற்கேற்ப வேறு கதிரியக்கப் பொருள்களும் கையாளப் பெறுகின்றன. இங்கிலாந்தில் கதிரியக்கத் தேலியமும்[4] அமெரிக்காவில் கதிரியக்கக் கார்பன், கதிரியக்க செசியம், கதிரியக்கக் கோபால்ட்டு ஆகியவையும் மேற்கொள்ளப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக டயர் உற்பத்தி செய்யும் கம்பெனி ஒன்று கார்பன் - 14-லிலிருந்து வெளிப்படும் வலுவற்ற பீட்டா-கதிர்வீச்சினைப் பயன்படுத்தி மிக மெல்லிய பொருளை அளக்கின்றது. ஆனால், கோபால்ட்டு - 60-லிருந்து வெளிப்படும் மிகவும் துளைத்துச் செல்லக்கூடிய காமா-கதிர் வீச்சினைப் பயன்படுத்தி மூன்று அங்குல அலுமினியத் தகடுகளின் கனத்தையும் ஒர் அங்குல இரும்புத் தகடுகளின் கனத்தையும் அளக்கின்றது.

இக் கருவிகளைக் கொண்டு கனத்தை அளவிடுவதில் பல நன்மைகள் உண்டு. ஒன்று, அளவு மிகச் சரியாக இருக்கும். இரண்டு, அளவையை எளிதாகவும் அளந்து கொள்ள-


  1. 7 மீளும் கதிர்வீச்சு - reflected radiation.
  2. 8 மீளுமாறு - reflected.
  3. 9ஸ்ட்ரான்ஷியம் - strontium.
  4. 10 தேலியம் - thelium.