பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£66 அணுவின் ஆக்கம்

என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட குழல் வழியில் மிகச் சிறிய அளவு எண்ணெயில் கரையும்" கதிரியக்க ஓரிடத் தானே இரண்டு எண்ணெய்களும் சேரும் இடத்தில் போட்டு விடுவர். அந்த எண்ணெய்களை எடுக்கும் இடங்களில் கைகர் எண்-கருவியைக் கொண்டு கதிரியக்கத் திரவத்தைக் கண்டறிந்து விடலாம்; இச்செயல் மிக விரைவாகவும் நடை பெறுகின்றது. திரவங்களேக் கட்டுப்படுத்தும் வால்வுகளே இயக்குபவர் பல்வேறு குழல்களிலிருந்து வரும் திரவங்களைச் சிறிது சிறிது எடுத்து அவை என்ன திரவம் என்று காணும் முறைகள் மிக மெதுவாக நடைபெறுபவை. எனவே, கதிரியக்க ஓரிடத்தான் இச்செயலே எளிதாக்குவதுடன், விரைவாகவும் நடைபெறத் துணைபுரிகின்றது. கதிரியக்க ஓரிடத்தான் துணையின்றேல், பல பீப்பாய்கள் அளவுள்ள எண்ணெய்களை வெளியே எடுத்துச் சோதித்து வீணுக்கிய பிறகுதான் எங்குப் புதிய எண்ணெய் தொடங்குகிறது என் பதைக் கண்டறிதல் முடியும். இம்முறை கண்டறியப்பெற்ற பிறகு ஒரே குழல் வழியாக பண்படா' பெட்ரோலியம், வழுக்கிடு எண்ணெய்கள்", டிஸெல் எண்ணெய் போன்ற எல்லாப் பொருள்களையுமே ஒன்றன்பின் ஒன்ருக அனுப்ப ஏதுவாகின்றது. கைகர் எண்-கருவியினைக் குழலின் மேல் வைத்தே உள்ளே செல்லும் திரவத்தை அறிந்து கொள்ள லாம். வால்வுகளே இயக்குபவர் எண்ணெயை அதற்கேற்ற எண்ணெய்த் தேக்கங்களில்" திருப்பி விட்டுவிடுவார். மிகச் சிக்கலான அமைப்பிலுள்ள குழல்களில் ஒழுக்கு ஏற்பட்டா லும் கதிரியக்க ஓரிடத்தான்களைக் கொண்டு அவ்வொழுக் குள்ள இடத்தைக் கண்டறிந்துவிடலாம். இந்தக் குழல்கள் சுவரின் உட்புறமாக அமைந்திருந்தாலும் பூமியின் அடியில் புதைந்திருந்தாலும் குழலிலுள்ள குறையை அறிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, கதிரியக்கப் பாஸ்வரமும் கதிரியக்க அயோடினும் கரைசல் நிலையில் பூமிக்கு அடியில்

  • எண்ணெயில்-கரையும் - oil-souble. பண்படா - erude. * வழுக்கிடு எண்ணெய் - lubricating oil. * Gääälä. tank.