பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/289

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொழில்துறையில் அணு

278



உராய்வும்28 வழுக்கிடுதலும்29 : “ டீஸெல்30 எண்ணெய்ப் பொறிகளிலும் காஸோலின் எண்ணெய்ப் பொறிகளிலுமுள்ள ஊடியங்கியிலுள்ள 31வளையங்களின் தேய்மானத்திற்குக் கதிரியக்க ஓரிடத்தான்கள் அதிகமாகப் பயன்படுகின்றன. இன்று அமெரிக்காவில் பல கம்பெனிகளில் இவை கையாளப் பெறுகின்றன. சோதனை செய்யப் பெற வேண்டிய பொறியின் பகுதியை ஓக் ரிட்ஜ் என்னும் இடத்திற்கு அனுப்பி அங்குள்ள அணு உலையில் வைத்து கதிரியக்க

இந்த ஆராய்ச்சியால்: (1) எண்ணெய்க்கு வரும் உலோகம்,1/100,000 அவுன்சுக்குச் சுத்தமாக அளக்கப் பெறுகின்றது; (2) பொறி இயங்கிக் கொண்டிருக்கும் பொழுதே மாதிரி எண்ணெய் எடுக்கப்பெறுகின்றது; (3) உருத்துலக்கப் பெற்ற பிலிம் பொறியில் தேய்ந்துள்ள பகுதியைக் காட்டுகின்றது.

முடையதாகச் செய்வர். பிறகு அதனே அதற்குரிய பொறியில் பொருத்தின் பொறியினை இயங்கும்படி செய்வர். பொறி இயங்கிக்கொண்டிருக்கும் பொழுதே அடிக்கடி வழுக்கிடு பொருளைச் சிறிது சிறிதாக எடுத்து அதிலுள்ள கதிரியக்க அளவு நிர்ணயிக்கப்பெறும் ; இதிலிருந்து தேய்மானத்தின் அளவும் தீர்மானிக்கப்பெறும்.


28உராய்வு-friction' 29வழுக்கிடுதல்-lubricatioc 31 ஊடியங்கி piston 30டீஸெல்-Diesel 53-19