பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்துறையில் அணுவு 27む

பதற்கும், டி. ஸி. மோட்டாரிலுள்ள கரி புருசின் தேய்மா னத்தை ஆராய்வதற்கும், தரையிலுள்ள மெழுகுரெட்டுக் களின் தேய்மானத்தைத் தீர்மானிப்பதற்கும் இந்த யுக்தி முறைகளைக் கையாளுகின்றன.

உராய்வதால் ஏற்படும் தேய்மானத்தைத் தவிர அரிப் பினுல் உண்டாகும் தேய்மான ஆராய்ச்சியிலும் கதிரியக்க ஒரிடத்தான் யுக்திமுறையைப் பயன்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, அமெரிக்காவில் சில கம்பெனிகள் வாயுக்கள் விசும் சுடு மின்னுக்கப் பொறிகளின் அரிப்பின் அளவை கதிரியக்க கந்தகத்தைக் கொண்டும், கண்ணுடிக் கம்பெனி. கள் உருகிய கண்ணுடிக்குழம்பால் உண்டாகும் உருக்கும் கலன்களின் தேய்மானத்தைக் கதிரியக்கச் சோடியத்தைக் கொண்டும், ஊது உலகளின் உட்புறத்திலுள்ள நெருப்புச் செங்கலின் தேய்மானத்தை அளப்பதற்கு கதிரியக்கக் கோபால்ட்டைக்கொண்டும் அளக்கின்றன.

பலவகை அளவீடுகள்

மேலே குறிப்பிட்டவாறு கதிரியக்க ஓரிடத்தானின் பயன் களே மூன்று விதமாகப் பிரித்து ஆராய்ந்ததில் பல முக்கிய மான பயன்கள் விடப்பெற்றுள்ளன. அவற்றுள் பல முக்கிய மான உபயோகங்களும் உள்ளன. எனவே, அவற்றையும் ஈண்டு குறிப்பிடுவோம்.

ரப்பர் தொழிற்சாலையில் வல்கனேசேஷன் " பாலிமரை சேஷன் ' என்ற கிரியைகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைக் கதிரியக்கக் கந்தகத்தைக்கொண்டு ஆராய்கின் றனர். கதிரியக்கக் கந்தகம் இந்தக் கிரிய்ைகளில் முதன்மை யான பங்கு கொண்டிருக்கின்றது ; ஆனால், அதன் விவரம் இன்னும் புதிராகவே இருக்கின்றது. அதே ஓரிடத்தான் ரேயான் ' தொழிற்சாலையிலும் ஒரு பிரச்சினைக்கு விடை

35 so flût 1-corrosion. * ஊது o_o - blast furnace$3 வல்கனைசேஷன் * vulcanization- $9 பாலிமரைசேஷன் - polymerization. “ GJuursir – rayon