பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

அணுவின் ஆக்கம்


 காண்கிறது; அங்கு ஒரு குறிப்பிட்ட நிலையில் கந்தகத்தைச் சேர்த்துப் பிறகு ஒரு நிலையில் அதனை நீக்க வேண்டியிருக்கிறது. எந்த நிலையில் அதனை நீக்கவேண்டும். என்பது தெரியாமலிருந்தது. இப்பொழுது சிறிது கதிரியக்கக் கந்தகத்தை அதனுடன் கலந்து இதனைக் கண்டறிந்துவிட்டனர். இதில் கதிரியக்கச் சோடியத்தைப் பயன்படுத்தி மிகத் திட்டமான அளவில் ஒரிடத்தான் யுக்தி முறையில் சிறந்த வெற்றி கண்டுள்ளனர். ஒரு மைல் நீளமுள்ளதும், ஆனால் ஓர் அவுன்சு எடையுள்ளதுமான, மெல்லிய கயிற்றில் இதனைக் கலந்து அளந்து கண்டனர்.

ரப்பர்ச் சக்கரங்களை41 உற்பத்தி செய்வோர் கதிரியக்க அணுக்களைப் பயன்படுத்தி அச்சக்கரங்களின் தேய்மானத்தைக் கண்டறிகின்றனர். அமெரிக்காவில் சில கம்பெனிகள் தயாரிக்கும் சக்கரங்களின் சில புறவரிகளில் கதிரியக்கப் பாஸ்வரத்தை அமைக்கின்றனர். இந்தச் சக்கரங்களின் தேய்மானம் இரண்டு முறையில் சோதிக்கப் பெறுகின்றது. கைகர் எண்-கருவியைப் பயன்படுத்திக் கண்டறிவது ஒரு முறை ; இதைவிடச் சிறந்த மற்றொரு வழி, அந்தச் சக்கரம் உருண்டு சென்ற சாலைப் பகுதிக்குமேல் கதிர்உணர் பிலிம் ஒன்றைத் திறந்து வைப்பதாகும். சக்கரம் சென்ற சுவடு விளிம்புகளைச் சீமைச் சுண்ணாம்புக் கோடுகள் குறிக்கின்றன. இவற்றினிடையே அந்தப் பிலிம் பல மணிநேரம் திறந்து வைக்கப் பெறுகின்றது. சக்கரத்திலிருந்து தேய்ந்த ரப்பர்த் துணுக்குகள் தம் படத்தைப் பிலிமில் பதிக்கின்றன. இதிலிருந்து தேய்மானத்தின் அளவு நிர்ணயிக்கப் பெறுகின்றது. இந்தத் தேய்மானம் ஒரு பவுண்டில் பத்து இலட்சத்தில் ஒரு பங்கை விட சிறிய பின்னமாகவும் இருக்கும்.

எதிர் காலத்தில்: கதிரியக்க ஓரிடத்தானத் தொழிற் சாலையில் பயன்படுத்தும் முறை ஒரு புதிய துறையாகும். அவற்றைப் பயன்படுத்தும் பல்வேறு முறைகள் இனிமேல் தான் கண்டறியப் பெறுதல் வேண்டும். இன்று அணுவாற்றல் குழு தயாரிக்கும் கதிரியக்க ஓரிடத்தான்களை பல


41ரப்பர் சக்கரங்கள் - tyres.