பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15.

எதிர்காலத்தில் அணுவாற்றல்



ணுக்களைச் சிதைத்தும் இணைத்தும் வெளிப்படுத்தம் பெறும் அளவற்ற ஆற்றலேக் கொண்டுள்ள அணுகுண்டுகள் விளக்கும் கேட்டினை இன்றைய மக்கள் நன்கு அறிவார்கள். அப்பெருங்கேட்டினை எண்ணி எண்ணி மக்களின் அறச்சுரனை வளர்ந்துவரும் அறிகுறிகள் தோன்றாமல் இல்லை. அணுவாற்றல் ஆயுதங்களேப் பயன்படுத்தினால் பல நாடுகளுக்குப் பெருங்கேடு விளையும் என்ற அச்சமே மற்றொரு உலகப் பெரும்போர் மூளாமல் தடுக்கக்கூடும். இன்று விடுதலை பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் அணுவாற்றலின் ஆக்க வேலைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. அணுவாற்றலால் விளையக்கூடிய நன்மைகள் யாவும் எல்லோருக்கும் உரியவை. 'அணுவாற்றல் தேவையா?' என்ற பிரச்சினையில் நாம் ஈடுபடத் தேவையில்லே, 'அணுவாற்றலே உலக நன்மைக்கு எங்ஙனம் கையாளுவது என்ற பிரச்சினையில் தான் நாம் அனைவரும் ஈடுபடவேண்டும். ஒவ்வொருவரும் அணுவாற்றல் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அறிந்து கொள்ள முனைய வேண்டும். அணுவாற்றல் பற்றிய நூல்கள், பருவ வெளியீடுகள், செய்தித் தாள்கள் ஆகியவற்றைப் படிப்பதில் அக்கறை காட்ட வேண்டும். மக்களாட்சி நடைபெறும் இக்காலத்தில் மக்கள் அணுவாற்றல் பற்றி நினைப்பதும், சொல்வதும், செய்தவதும் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள அரசியல் தலைவர்களின் செயல்களே உருவாக்குவதில் பங்கு பெறும். எதிர்