பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத்தில் அணுவாற்றல்

279.




காலத்தில் அணுவாற்றலைப் பயன்படுத்துவது மக்கள் கையில்தான் இருக்கின்றது. தனிப்பட்ட மனிதர்கள் சீரும் சிறப்பும் பெற்றால் மக்களாட்சி முறையும் சிறக்கும் ; மன்பதையும் உய்யும். இனி, எதிர்காலத்தில் அணுவாற்றல் எவ்வெவ்வாறு பயன்படக்கூடும் என்பதைச் சிறிது. காண்போம்.

மிக உயர்ந்த நுண்ணணுப் பெருக்கியிலும் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணிய அணுவில் அடங்கிக் கிடந்த பேராற்றலை மனிதன் விடுவித்துக் கட்டுப்படுத்தின நாள் தொட்டு தொழில்துறை நுட்பங்கள் அணுவாற்றலில் வளர்ந்திருக்கின்றன. இன்று நாம் 'அணு சகாப்தத்தின்' வாயிற்படியில் இருக்கின்றோம். இந்தச் சகாப்தம் நமக்கு அளிக்கும் எல்லையற்ற நன்மைகள் இதுகாறும் நாம் தொழில்வளர்ச்சியில் பெற்ற நன்மைகளைவிட மிக அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அமைதிக் காலத்தில் அணுவாற்றலால் பெறக்கூடிய நன்மைகளனைத்தினையும் ஆராய்ந்து காண அறிவியலறிஞர்கட்குச் சந்தர்ப்பம் கிட்டுமானல், நமது எதிர்கால வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் அணுவின் நுட்பமான ஆற்றலின் தன்மையை ஏதாவது ஒரு முறையில் காணலாம். இன்று அத்துறையில் அடிப்படை முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றுள்ளன ; இன்னும் ஏராளமான செயல்கள் ஆற்றவேண்டியதாக இருப்பினும், பயனுள்ள முறையில் பல வியத்தகு அம்சங்கள் நமக்குத் தலை காட்டத் தொடங்கியிருக்கின்றன.

மின்னாற்றல் : அணுவாற்றல் மின்னாற்றலின் எல்லையற்ற மூலமாக இருப்பதால், அதிலிருந்து பல பெரிய பெரிய நன்மைகளையெல்லாம் எதிர்பார்க்கலாம். நீரிய குண்டு1 செய்வதற்கு மட்டிலும் தான் பயன்படும் என்று கருதப் பெற்ற 'இணைதல் கிரியை'2 யினை ஆராய்ச்சிக்குட்படுத்தி அதிலிருந்து அணுவாற்றலை உண்டாக்கலாம் என்று


1 நீரியகுண்டு - H-bomb. 2இணைதல் கிரியை - fusion process.