பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

அணுவின் ஆக்கம்



காய்கறிகள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் முறையில் பயன்படும் சாதனமாகக் கொள்ளலாம் என்பதைப் புலப்படுத்துகின்றன. ஆனால், அன்றாடத் தேவைகளில் இம்முறையை மேற்கொள்வதற்கு முன்னர் ஏராளமான சோதனைகள் செய்யப் பெறவேண்டும்.

இவ்வாறு உணவுப் பொருள்களைப் பாதுகாப்பதில் ஒரே ஒரு கஷ்டம் உள்ளது. வழக்கமாகப் பயன்படும் முறைகளை நோக்குமிடத்து, அணுபற்றிய கதிரியக்கம் அதிகச் செலவில் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அன்றியும், பல்வேறு சந்தர்ப்பங்களில் இம்முறையை மேற்கொள்ளும் பொழுது, உணவுப் பொருள்களின் சுவையும் நிறமும் கெடாதிருக்குமாறும், முக்கிய விட்டமின்களும் ஏனைய ஊட்டச்சத்துக்களும் சிதையாதிருக்குமாறும் அம்முறையைச் சீர்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கதிர்வீசல் உணவுப் பொருள்களை நஞ்சுடையனவாகச் செய்வதால், உணவுப்பொருள்களுக்கு எந்த அளவு கதிர் வீசல் தரப்பெறுதல் வேண்டும் என்பதை அறிவியலறிஞர்கள் கண்டறிய வேண்டியது முக்கியமாகும். எனினும், இத் துறையில் ஆராய்ச்சிகளை நடத்துபவர்கள் இத்திறன் வெற்றிகரமாகக் கண்டறியப் பெறும் என்பதில் ஐயமின்றியுள்ளனர். அமெரிக்க ஐக்கிய நாட்டுச் சைனியப் பாதுகாப்பு அதிகாரிகள் பல கோடிக்கணக்கான டாலர் செலவில் ஒர் ஐந்தாண்டுத் திட்டத்தை வகுத்து உணவுப்பொருள்களைக் கெடாமல் பாதுகாக்கும் வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். தகரப் புட்டிகளில் அடைத்தல், சீதன அலமாரிகளில் வைத்தல். என்ற முறைகளுடன் கதிரியக்க முறையினாலும் உணவுப் பொருள்களைச் சேமிக்க முடியுமானல், சைனியங்களுக்கும் பொது மக்களுக்கும் பெருநன்மை விளையும்.

செயற்கை முறையில் உணவு : அணுவியல் அறிஞர்கள் இப்பொழுது மேற்கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளினல் ஒரு வினோதமான விளைவினை எதிர்பார்க்கலாம். பச்சைத் தாவரங்களின்றி செயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்யலாம் என்று எண்ணி ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டு