பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 அணுவின் ஆக்கம்

கின்றனர். இந்த முறையில் அணுக் கதிர்வீசல் வெற்றிகர மாக இருக்குமாயின், அது மருத்துவத் துறையில் மாபெரும் பணிபுரிந்து மானிட வர்க்கத்துக்கே பெருந்துணையும் புரியும் என்பதற்கு ஐயமில்லை. இதனுல் குறைந்த செலவில் மிகத் திறமையான, பயன்தரக் கூடிய மருந்துச் சரக்குகளே உற். பத்தி செய்யவும் முடியும்.

அணுக்கதிர்களைக் கொண்டு மருந்துக்களுக்கும் துண் லுயிர் அழிப்புச் ' செய்யக்கூடும் என்ற நம்பிக்கைக்கும் இடம் உண்டு. மருத்துவத்துறையில் இன்ைெரு முறை யிலும் அணுவாற்றல் பயன்படுகின்றது. சில மருந்துத் தாவ ரங்களைக் கதிரியக்கமுள்ள செடிவீட்டில் ' வளர்ப்பதால் கதிரியக்கமுள்ள மருந்து வகைகள் உற்பத்தி செய்யப் பெறு கின்றன. எடுத்துக்காட்டாக, பாக்ஸ் குளோவ் " என்ற ஒருவகைப் பூண்டிலிருந்து டிஜிடாக்ஸின்' என்ற ஒரு இதய மருந்து தயாரிக்கப்பெறுகின்றது. காற்றுக் கட்டுப்பாடுள்ள ஒரு செடிவீட்டில் கதிரியக்கக் கார்பன் உள்ள கரியமில வாயு இருக்குமாறு செய்து இந்தப் பூண்டுகளை வளர்க்கின் றனர். சாதாரணக் காற்றிலுள்ள கரியமில வாயுவை உப யோகிப்பது போலவே, கதிரியக்கமுள்ள அவ் வாயுவையும் செடிகள் பயன்படுத்துகின்றன. தொடுப்பு அணுக்கள் " தாவரத்தின் உறுப்புக்களிலெல்லாம் பரவுகின்றன ; பிறகு அத்தாவரத்திலிருந்து தயாரிக்கப்பெறும் சுத்தமான டிஜி டாக்ஸின் மருந்திலும் அந்த அணுக்கள் காணப்பெறு கின்றன. தொடுப்பு அணுக்களுள்ள டிஜிடாக்ஸின் மருந்து மானிட உடலில் எவ்வளவு கால அளவு தங்குகிறது என் பதை இனி கண்டறியக் கூடும். சிக்காகோ பல்கலைக் கழகத்தில் ' மேற்கொள்ளப்பெற்ற சோதனை யொன்றிஞல்ல இம்மருந்து 40 முதல் 70 நாட்கள் வரையில் உடலில் தங்குகிறது எனக் கண்டுள்ளனர். மருத்துவ நிபுணர்கள்

நுண்ணுயிர் அழிப்பு - sterilization. 'செடிவீடு green house. * Lirásio (535mmeil - fox glove, * 14-5?LT& 6855 - digitoxin. ” Gärosius eggpiā āsir - tagged atoms. * fláðr(?&r Lisbääuäägåsh - Chicago University.