பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/302

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

அணுவின் ஆக்கம்



தொழில் துறை: இதுகாறும் ஏனைய துறைகளை விட, தொழில் துறைதான் அணுவாற்றலை ஆக்க வழிகளில் பெரிதும் பயன்படுத்தி வந்திருக்கின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் கனடாவிலும் மட்டிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் அணுவாற்றலைப் பல்வேறு தேவை களுக்கு ஏதாவது ஒன்று அல்லது இரண்டுவித வடிவங்களில் பயன்படுத்திவருகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு பயன்படுவது இன்னும் அதிகமாகலாம். மோட்டார் டயர் தொழிற்சாலையொன்று அணுக் கதிர்வீசலைப் பயன்படுத்தி சிறந்த டயர்களை உற்பத்தி செய்யலாம் என நம்புகின்றது. கந்தகத்தை உபயோகித்துச் செய்யும் தொழில் திறன் இன்னும் நயமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிளாஸ்டிக்[1] சாமான்களைக் கதிர்வீசலுக்குட்படுத்தி பல வியத்தகு மாற்றங்களை உண்டாக்கலாம் என்று தொழில் நிபுணர்கள் கருதுகின்றனர். சிலவகைப் பிளாஸ்டிக்குகளைக் காமா-கதிர்வீசலுக் குட்படுத்தினால் அவை எஃகை விடக்கடினமாகின்றன என்று சோதனைகள் நிரூபித்திருக்கின்றன. இதுவும் இலேசான எடையும் நெருப்புப் பற்றா மையும் ஒன்று சேர்ந்து பிளாஸ்டிக்குகளை வீட்டிலும் வாணிகத் துறையிலும் கட்டிடங்கள் கட்டுவதில் அவற்றின் பயன்களை அதிகமாக்குகின்றன. பாலிஎத்திலீன்[2] என்ற மெதுவான, எளிதாக வளைவுந் தன்மையுள்ள பிளாஸ்டிக் கின் தன்மைகளைக், காமா-கதிர்வீசல் அடியோடு மாற்றி விடுகின்றன என்பதைச் சோதனைகளால் அறிகின்றோம்.

நாம் கையினால் பிழிந்து உள்ளிருக்கும் எண்ணெயை எடுக்கக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களைப்[3] பார்த்திருக் கின்றோமல்லவா? அவை பாலிஎத்திலீன் என்ற பிளாஸ்டிக் வகையால் செய்யப் பெற்றவை. சாதாரணமாக அவ்வகை பிளாஸ்டிக் விரிந்த முறையில் பயன்படுவதில்லை. காரணம், அது 80'C சூட்டு நிலையிலேயே மிகவும் மென்மையாகிவிடுகின்றது; 115C சூட்டு நிலையில் திரவ நிலையை அடைந்து


  1. 28. பிளாஸ்டிக் - plastic.
  2. 29. பாலினத்திலீன் - polythelene.
  3. 30.போத்தல் - bottle.