பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

ஆணுவின் ஆக்கம்

கின்றனர். நியூ யார்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் லைல் பார்ஸ்ட்டு என்பார் தண்டவாளத்தில் செல்லும் அணு வாற்றல் பொறி யொன்றின் அமைப்பை ஆயத்தம் செய்து விட்டார். அந்தப் பொறியில் யுரேனியத்தைப் பக்குவிடும் பொருளாக அமைத்து. நீரால் குளிர்விக்கப் பெறும் நீராவி வகை உலையொன்று அமைக்கப் பெறும். அது இன்று மிகத் திறனாக இயங்கும் உஸெல் இடப்பெயர்ச்சிச் சாதனத்தை [1] விட நான்கு மடங்கு அதிக ஆற்றலுடன் இயங்கும். என்று சொல்லப்பெறுகின்றது. அன்றியும், அது பதினொரு இராத்தல் யுரேனியத்தைக்கொண்டு ஓராண்டு முழுவதுமே இயங்குமாம்.

அனுவாற்றல் விளைவிக்கும் அற்புதப் பயன்களில் விமானப் பயணத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் மிகவும் முக்கியமானது, நீண்டகாலம் வரையறை யொன்று பின்றி வானத்திலேயே செல்லக்கூடிய ஒரு விமானத்தைக் கற்பனையில் காணலாமன்றோ? அத்தகைய விமானம் இப் பூமண்டலத்தை ஒரு தடவை- ஏன்? பல தடவைகள்-- கணக்கில்லா வேகத்துடன் சுற்றிவரக் கூடும். ஆனால், அத்தகைய விமானம் ஒன்றை அமைப்பதற்கு முன்னர் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும். விமானத்தி லுள்ள சிறிய இடத்தில் அமைக்கக் கூடிய மிகச் சிறியதும் இலேசாகவுள்ளதுமான அணு இயந்திரம் [2]ஒன்றை அமைப்பதில் முதல் சங்கடம் எழுகின்றது. அணு இயந் திரங்களில் கதிர்வீசலைத் தடுக்கும் காப்புறை[3] அமைத்தல் இன்றியமையாதது என்பது நமக்குத் தெரியும். ஆனால், இன்றுள்ள மிகச் சிக்கலான [4] கருவித் தொகுதியமைப்பு[5] மிகப் பளுவாக இருப்பதால் அது விமானத்திற்குச் சரிப் படாது. இவற்றை எளிதாக்கும் முறைகள் ஆராயப்பெற்று வருகின்றன. மிக விரைவில் இக்குறைகளை யெல்லாம் நீக்கி


  1. 36. டீஸெல் இடப் பெயர்ச்சிச் சாதனம் - diesel locomotive.
  2. 37. அணு இயந்திரம் - reactor.
  3. 38 காப்புறை - protective shielding.
  4. 39. மிகச் சிக்கலான - combersome
  5. 40. கருவித்தொகுதி - equipment.