பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零體 அணுவின் ஆக்கம்

ஏறிச் செல்லும் விமானம் ஒன்றை அமைத்துவிடலாம் என்பது அவ்வறிஞரின் நம்பிக்கை. அந்த விமானம் வண்டு பறப்பதுபோல் இரண்டு மணிநேரத்தில் இவ்வுலகத் தையே சுற்றி வரக்கூடும்.

குடியேற்றங்கள் : மின்சாரத்தைக் கொண்டு செய்யப் பெறும் நவீன வசதிகளின் மையால் மக்கள் நாட்டுப்புறத் தைத் துறந்து நகர்ப்புறத்தை நாடி வந்துகொண்டிருக்கின்ற னர். இயற்கை வனப்புக்களையும் இயற்கைச் செல்வங்களே பும் கைவிட்டு செயற்கை முறைகளில் மோகங்கொண்டு இவர்கள் நகரங்களில் குடியேறுகின்றனர். அணுவாற்றலைக் கொண்டு இயங்கவல்ல மின்கடங்கள் கண்டறியப் பெற்று அவை எங்கனும் பெருவழக்காகிவிடும்பொழுது, சிற்றுார்கள் செழிக்கும் ; பாட்டாளி மக்களும் பிறரும் சிற்றுார்களிலேயே தங்குவர். இதனுல் இயற்கைச் செல்வங்களேக் கொழிக்கச் செய்யலாம்.

மக்கள் தொகை பெருகப் பெருக, புதிய குடியேற்றங் களும் பெருக வேண்டியது இன்றியமையாததாகும். இதனுல் பாலேவனங்களாகக் கிடக்கும் பகுதிகள் யாவும் சோலை வனங்களாகக் கூடும். கனிமரங்களும், பூஞ்சோலை களும், பயிர் வகைகளும் எம்மருங்கும் காணப்பெறும் காட்சி களாகி விடும். பகீரதன் ஆகாயத்திலிருந்து தவ வலிவால் கங்கையைப் பாதாளத்திற்குக் கொண்டு சென்ருன் என்பது புராணத்தில் காணப்படும் செய்தி. இன்றைய அறிவியல் அறிஞன் இந்த அணுவாற்றலப் பயன்படுத்தி அரக்கப் பொறிகளால் இயங்கும் பம்புகளைக்கொண்டு மணல் தரைக் குக் கீழ் பாதாளத்திலுள்ள நீர் மூலத்திலிருந்து நீரை பூமிக்குக் கொணர்ந்து விடும் செய்தியை எதிர்காலத்தில் காணப்போகின்ருேம். இன்னும், அணுவாற்றலால் பெறும் சூட்டை யும் மின் குற்றலையும்கொண்டு ஆர்க்டிக் பகுதி போன்ற பனிப் பிரதேசங்களிலும் சிறந்த குடியேற்றங்களை அமைத்துவிடலாம் என்று நம்புகின்றனர்.

- 47 குடியேற்றம் - colony. ' பனிப் பிரதேசங்கள் - frigid zoness