பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்காலத்தில் அணுவாற்றல்

231


அணு எரியைகள் : பல்லாயிரக் கணக்கான ஆண்டு கட்கு உபயோகப்படக்கூடிய அணு எரியைகள் கிடைத்துள்ளன என்று அண்மையில் அறிந்துள்ளனர். பூமியில் ஏராளமான யுரேனியப் படிவுகள் உள்ளன என்பதை நாம் நன்கு அறிவோம். அதைவிட அதிகமாகத் தோரியம் கிடைக் கிறது என்று சொல்லப்பெறுகின்றது. இதுகாறும் தோரியத்தைப் பிரித்தெடுப்பது கஷ்டமாகவும் இருந்தது; செலவும் கட்டுக் கடங்காததாக இருந்தது. இப்பொழுது நிலக் கரியைக் காட்டிலும் அதனைக் குறைந்த செலவில் பிரித்தெடுக்கலாம் என்று கண்டறிந்து விட்டனர். தோரியம் நேரடியாக அணு எரியையாகப் பயன்படுவதில்லை. அதன. யு-233 ஆக மாற்றிதான் அணு எரியையாக்கவேண்டும். யு-233 சிறந்ததோர் அணு எரியை என்பது நாம் அறிந்ததே.

தட்ப - வெப்ப நிலை : செடிவீடுகளிலுள்ள தட்ப - வெப்பநிலை பாதுகாப்பான முறையில் கட்டுப்படுத்தப் பெறுகின்றது என்பதை முன்னர்க் கண்டோம். அணுவாற்றலைப் பயன்படுத்தி உலகின் தட்ப வெப்பநிலையையே கட்டுப்படுத்தக் கூடிய நாள் வரும் என்று எண்ணிச் சிலர் கனவு காண்கின்றனர். மலிவான அணுவாற்றல் கிடைக்கும் என்றும், அதனைப் பயன்படுத்தித் தேவையுள்ள பொழுது மழையினைப் பெய்விக்கக் கூடும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரு நாட்டின் கடற்கரையருகே செல்லக் கூடியதும் அதன் தட்ப வெப்பநிலையினம், பாதிக்கக் கூடியதுமான கடல் நீரோட்டங்களேச் சூடாக்க முடியும் என்றும் அவர்கள் பேசுகின்றனர். அண்மைக் காலத்தில் இத்தகைய ஒரு நிலை ஏற்படும் எனத் தோன்றவில்லை. ஒரு கால் அது எக்காலத்தும் கனவாகவே இருக்கக்கூடும்.

அணுகுண்டுகளே வெடிக்கும் சோதனைகளில் வெளிப்படும் அணுவாற்றலைப் பயன்படுத்தி எதிர்கால வானிலையைத் துல்லியமாகக் கணிக்கச் சில வானில ஆராய்ச்சி நிலையங்கள் முயற்சி செய்கின்றன. ஆனால், அணுகுண்டுச் சோதனைக்ள் விபரீதமான வானிலையையோ, மழையினையோ