பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器恕 அணுவின் ஆக்கம்

பனிப் புயலையோ விளைவிப்பதில்லை தற்கால வானிலேயை அவை சிறிதும் பாதிப்பதில்லை.

தொல் பொருட்கலை : எதிர்கால வாழ்வைப்பற்றிக் சோதிடங்கூறும் அறிவியல் அறிஞர்கள் கி. பி. 8000-ஆம் ஆண்டில் நம்முடைய வாழ்க்கை எவ்வாறு அமையும் என்று திட்டமாகக் கூறஇயலாது. ஆல்ை, அவர்கள் கி. மு. 3000-ஆம் ஆண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை எப்படி 'யிருந்தது என்று சொல்லிவிட முடியும். அணுவாற்றல் இதற்குப் பெருந்துணை புரிகின்றது. பண்டைய வரலாற். றைப் பாங்குடன் கூறவல்ல தொல்பொருட்கலையில் " அணு வாற்றல் வியத்தகு முறையில் பயன்படுகின்றது. அல்லாவுத் தீன் என்ற சிறுவன் தன் கையிலிருந்த அதிசய விளக்கினேக் கொண்டு பல அற்புதக் காட்சிகளைக் கண்டதுபோல, இன்றைய அறிவியலறிஞர் கார்பன்-14 ஐக் கொண்டு பல அரிய உண்மைகளைக் காண்கின்ருர். கார்பன்-14 தொல் இபாருட்கலையில் பண்டைக் காலத்தின் திறவுகோலாகப் பயன்படுகின்றது. இந்தக் கதிரியக்கப்பொருளினேக்கொண்டு. பழங்காலச் சிதைவுகளிலிருந்து கிடைக்கும் பல பொருள் களின் காலத்தை மிகத் திட்டமாக நிர்ணயிக்கமுடிகின்றது,

உலகிலுள்ள பெரும்பான்மையான பொருள்களிலும்தாவரங்கள், பிராணிகள், மீன்கள் உட்பட-ஓரளவு கார்பன்-14 இருக்கிறது என்பதை ஆராய்ச்சிகளால் அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். கார்பன் - 14 என்ற அணுக்கள் வாயு மண்டலத்தின் மேற்பகுதியில் இயற்றப்படுகின்றன. இந்த அணுக்களே வாயுமண்டலத் தில் வாழும் எல்லா உயிரினங்களும் வேதியல் முறையில் உட்கவருகின்றன." ஒரு செடி பட்டுப்போனுலும் சரி, ஒரு மரம் வேர்களினின்று வெட்டித் துணிக்கப் பெறுமானலும் சரி, ஒரு பிராணி மரித்துப் போனலும் சரி, இந்த உட் கவர்தல் என்ற கிரியையும் நின்று போகின்றது ; கார்பன்14-ஐ அவை ஏற்றுக்கொள்ளும் செயலும் நின்றுவிடு கின்றது. ஆனல், அவ்வணுக்கள் பிரிந்தழிந்து ப்ோகும் * @#srābqLITCŞilääu - archaeology. ” 2-1.56 if ~ absorb