பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்காலத்தில் அணுவாற்றல் £33,

செயல்" தொடர்ந்து நடைபெற்று வருகின்றது; கதிர்களே வீசும் செயலும் அங்ங்னமே தொடர்ந்து நடைபெறுகின்றது. ஒரு பொருளின் அரை-வாழ்வு என்ன என்பது நமக்குத் தெரியும். கார்பன்-14ன் அரை வாழ்வு 5500 யாண்டுகள்: அஃதாவது, தொடக்கத்திலுள்ள கார்பன்-14ல் பாதி அள வாகப் பிரிந்தழிவதற்கு 5500 ஆண்டுகள் செல்லும்.

எல்லாப் பொருள்களிலும் உள்ள கார்பன்-14ன் அளவு இன்னது என்பதை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானித்திருக் கின்றனர். இந்தக் கார்பன அப்பொருள்கள் ஒரு குறிப் பிட்ட விகிதத்தில் இழந்து வருகின்றன. பண்டைக் காலத் திய ஒருபொருளில் இப்பொழுது எவ்வளவு கார்பன் இருக் கிறது என்பதைச் சோதனை மூலம் தெரிந்துகொண்டால், அந்தப் பொருள் இவ்வளவு காலத்திற்கு முன்னர் இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆராய்ச்சியை முதன் முதலில் தொடங்கி வெற்றி கண்டவர் டாக்டர் வில்லார்டு எப். லிப்பி " என்பார் ; இவர் சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சார்ந்த உட்கரு ஆராய்ச்சி நிலையத்தின் ' ஆய்வாளர்களுள் ஒருவர். ஓர் எகிப்திய உத்தரகிரியைப் படகின் "மீது தம்முடைய சோதனையைச் செலுத்தி கார்பன். 14 உண்மையில் பண்டைய வரலாற்றின் திறவுகோல் என்ப தைக் கண்ட்றிந்தார். அவர் கண்ட உண்மை வரலாற்று உண்மையுடன் முற்றிலும் இணங்கியிருந்தது. இங்ங்னமே அவர் நியூயார்க் மாகாணத்தின் மேற் பகுதியில் கிடைத்த செவ்வித்தியரின் பண்டைச் சின்னங்களேயும் கார்பன்-14 சோதனைக்குட்படுத்தி வெற்றி கண்டார். எனவே, பொருள் களின் வயதை நிர்ணயம் செய்யும் செயலில் கார்பன்-14 என்பது பல பூட்டுக்களுக்குப் பொருந்தும் ஒரு திறவு கோலாகத் திகழ்கின்றது. இந்தத் திறவுகோலக்கொண்டு இதுகாறும் உத்தேசமாக எழுதப்பெற்றுள்ள வரலாற்று

  • 19fjöğEgßġġi Ġurġiso - disintegration. “ –ršLił sïòsorff© stû. sôñ1î - Dr. Willard F-Libby. “ » -+g; ஆராய்ச் & £&outh - Institute for Nuclear Studies. “ orđio Astuu a-žģ5ystfisɔuĵŭ ul-G - Egyptian funeral boat