பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&諡4 அணுவின் ஆக்கம்

உண்மைகளைச் சரி பார்க்கலாம்; வரலாறும் மாற்றி எழுதப் பெறவேண்டிய சந்தர்ப்பமும் ஏற்படலாம். அமெரிக்கா வில் யேல் பல்கலைக் கழகத்தில் பூகோள கால நிர்ணய. ஆய்வகம்" ஒன்று நிறுவப் பெற்றிருக்கின்றது. அங்கு பண்டைக் காலத்துச் செல்வங்கள், பாஸில் சிதைவுகள்,: தொல் பொருட்கலைச் சின்னங்கள் ஆகியவற்றைச் சோதித்து அவற்றின் காலங்களே நிர்ணயித்து வருகின்றனர். இங் ங்ணம் நவீன அறிவியலின் தோற்றமாகிய கார்பன்-14 என்ற அற்புதத் திறவுகோலக்கொண்டு பழங்காலத்தை வருங் காலத்துடன் இணைக்கலாம். எதிர்காலத்தில் கார்பன்-14 என்ற கதிரியக்கப் பொருளால் தொல் பொருட்கலை ஆராய்ச்சி பல்லாற்ருனும் சிறக்கும். அறிவியலும் வரலாறும் இணையும் அற்புதத்தை நாம் பார்க்கத்தான் போகின்ருேம். அணுக் கொள்கையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. அணுவியல் தொடுவானத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கின்றது. அணுவியல் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளியே இல்லை. அறி தோறும் அறியாமை கண்டற்ருல். அணுவாற்றல் இன்னும் என்ன என்ன விதங்களிலெல்லாம் பயன்படப்போகின்றது என்பதை நாம் திட்டமாக வரையறுத்துச் சொல்வதற்கில்லை.

ஒரு காலத்தில் நாம் அணுவினே அண்டங்கட்டும் செங்கலாகமட்டிலும் நினைத்திருந்தோம். ஆளுல், அது இன்று அளவற்ற ஆற்றலின் தேக்கம் என்பதை அறி. கின்ருேம். அன்றியும், அது நவமணிகளின் பேழையாகவும்: விளங்குகின்றது. நவமணிகள் மட்டிலுமா ? இல்லை : இல்லை. அது கடவுட்டன்மை வாய்ந்த ஒரு பெட்டி. மிக மிக ஆழியதாய் ஓங்கி எழும் ஆற்றல் நிறைந்து ஒளிரும் பெட்டி யன்ருே அது ?

மூலபண் டாரம் வழங்குகின் ருன்வந்து முந்துமினே ? * Gus Lisbosão.3 spath - Yale University. * 1933ror *rso Risoru sastaisth - geo-chrometric laboratory

பாஸில் - fossil. " திருவாசகம் - 528.