பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/313

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கல வாழ்த்து

297


துறையென்றே சொல்லவேண்டும். இந்த அடிப்பகுதியிலிருந்து உயிரியல், தொல் பொருட்களை [1], புவியியல் [2], அண்ட இயல்[3] முதலிய கிளைகள் பிரிகின்றன.

அரை நூற்றாண்டிற்கு முன்னர் அணு மிகத் திண்மையான, துளைத்துச்செல்ல முடியாத ஒரு துணுக்கு எனக் கருதப்பெற்றது; அதன் உள்ளமைப்பை ஒருவரும் அறியமுடியாது என்று அறிஞர்கள் கருதினர். ஆனால், இன்று அதுவே ஒரு சிறிய அண்டம் என்று கண்டறிந்துவிட்டனர். அதனே விட மிகச் சிறிதாக உள்ள உட்கருதான் இறுதியான பகுதி என்பது இன்னும் உறுதிப்படவில்லை. அது மிகச் சிக்கலான ஆற்றல் திரண்டிருக்கும் ஒரு புதிராகவே காணப்படுகின்றது. இன்னும் அது அறிவியலறிஞர்களின் அறிவுக்கு எட்டாதி ஒரு பரம இரகசியமாகவே உள்ளது. சடமும் சக்தியும் எவ்வாறு ஒன்றனுள் ஒன்று மறைந்திருக்கின்றன என்பதும், ஒன்று பிறிதொன்றாக மாறும் விந்தையும் இன்னும் அவர்களுக்குப் புலப்படவில்லை. அணு பொருளா ? ஆற்றலா? அலையா ? சடமும் சக்தியும்தான் ஆதிப் பொருள்களா ? உண்மை என்ன ? அவற்றையெல்லாம் ஆராய்ந்து காண முடியுமா? என்பவற்றையெல்லாம் இன்னும் அறிவியலறிஞர்கள் அறிந்து தெளிந்த பாடில்லை. இவற்றையெல்லாம். நோக்க இப்புதிய துறை இன்னும் குழவிப் பருவ நிலயிலேயே இருக்கிறது என்பது புலனுகின்றது. அணுவைப்பற்றி அறிந்தவையாவும் பூச்வாங்கமானவையே.

இன்று மனிதன் நிறுவியுள்ள அணு உலைகள் யாவும் இதுகாறும் கண்டறிந்துள்ள பூர்வாங்க அறிவினைக்கொண்டு அமைக்கப் பெற்றவையே என்பதை உணர்தல் இன்றியமையாதது. அவை அறிவின் அடிப்படையில் அமைந்திருப்பது போல் அறியாமையின் அடிப்படையிலும் அமைந்துள்ளன என்றுதான் சொல்லவேண்டும். கடந்த ஐம்பது யாண்டுகளாக ஆய்வகங்களில் இரகசியமாகச் செய்துவந்த ஆராய்ச்சிகளில்லை அணுவையும் உட்கருவையும் துளைத்துக்


6. தொல் பிரிவுகளை - archaeology. 7.புவியியல் - geology. 8. அண்ட இயல்- cosmology.

  1. 6.தொல் பொருட்களை- archaeology
  2. 7. புவியல் - geology
  3. 8. அண்ட இயல் - cosmology