பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器夺盛 அணுவின் ஆக்கம்

அணுவாற்றல் மூலங்களேயும் ஒன்று சேர்த்து அவற்றின் பயணுக உலகை உய்விக்கவேண்டும் என்ற எண்ண ஒற் றுமைக்கு வந்துள்ளன. இத்தகைய ஒரு திட்டத்தைப்பற்றி அமெரிக்க நாட்டு மக்கள் தலைவர் ஐஸ்ளுேவர் * ஐக்கிய நாட்டுப் பேரவையில் 1958-ஆம் யாண்டு டிசம்பர் 8-ஆம் நாள் நிகழ்த்திய வரவாற்றுப் புகழ்பெற்ற சொற்பொழிவில் குறிப்பிட்டார். அவர் கூறிய திட்டத்தை ஒரு தீர்மானமாக முறைப்படி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், தென்ஆபிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய ஏழு நாடுகள் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தன. இத் தீர்மானத்தை ஐ. நா. சபையின் அரசியல் - பாதுகாப் புக் கழகம் 1954-ஆம் யாண்டு நவம்பர் 28-ஆம் நாள் ஒருமனதாக சிபாரிசு செய்து பேரவைக்கு அனுப்பியது. 1954-ஆம் யாண்டு டிசம்பர் 4-ஆம் நாள் ஐக்கிய நாட்டு ஸ்தாபனத்தின் பேரவை’ இத் தீர்மானத்தை ஒருமனத் துடன் ஒப்புக்கொண்டது. அதன் பயனகத்தான் 1955 ஆகஸ்டில் அணுவின் ஆக்க மாநாடு ஒன்று கூட்டப் பெற்றது. எண்பத்து நான்கு நாடுகள் ஒன்று கூடி அணு வாற்றலிலிருந்து மின்னுற்றலை விளைவிக்கும் வழிவகைகளையும் அணுவாற்றலை உழவுத்தொழில், உயிரியல், மருத்துவ இயல் ஆகிய துறைகளில் கையாளும் முறைகளையும் ஆராய்ந்தன. ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதிகளும் தம்முடைய அணு வாற்றல் மூலங்களைத் தெரிவித்தனர் : எதிர்காலத்தில் நடை பெறும் அனுவாராய்ச்சியில் தம்முடைய பங்கும் திறனும் எவ்வளவு இருக்கும் என்பதையும் உணர்த்தினர். அன்றி யும், அதுகாறும் தாம் கண்டறிந்த-ஆல்ை மறை பொரு ஹாாக வைத்திருந்த-உண்மைகளையும் தெரிவித்தனர்.

இத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடு களின் சபையின் ஆதரவில் ஒரு கழகம் நிறுவப்பெறுதல் வேண்டும். இதிலிருந்து அணுவியல்பற்றிய எல்லாத் தகவல்களும் பல நாடுகளுக்கும் வழங்கப்பெறும். அணு

    • g5mx3(SO)6 off - Eisenhower. so Gursos - General Assembly. ...