பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/324

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

அணுவின் ஆக்கம்


நீரிலும் நிலத்திலுமுள்ள மூலங்களை எவ்வாறு காப்பது என்று யோசனை கூறவும் காத்திருக்கின்றது. இறுதியாக அணுவாற்றலால் கிடைக்கும் மின்னாற்றலை உழவுத் தொழிலில் எவ்வாறு மேற்கொள்ளுவது என்ற ஆராய்ச்சியிலும் அதில் எழும் பிரச்சினைகளில் தீர்வு காணுவதிலும் ஈடுபட்டிருக்கின்றது.

ஐக்கிய நாட்டுக் கல்வி - அறிவியல் - பண்பாட்டுக் கழகம் : அணுயுகம் இக்கழகத்தை நோக்கி விடுக்கும் அறைகூவல் ஏனைய இரண்டு கழகங்களையும் நோக்கி விடுக்கும் அறை கூவலை விட ஆழ்ந்தும் அகன்றும் இருக்கின்றது. அறை கூவல் ஆழமாக இருப்பதற்குக் காரணம், இந்த யுகத்தின் ஒவ்வொரு பிரச்சினையிலும் அறிவியல் அடிப்படையாகவுள்ளது; அஃது அகன்று விளங்குவதற்குக் காரணம், கல்வி அறிவியல் பண்பாடு பற்றிய மாற்றங்கள் மிக விரைவில் அணு உலைகளைத் தொடர்ந்து எழுகின்றன. பெளதிக அறிவியல் துறைகள், சமூக அறிவியல் துறைகள், பண்பாட்டுக் கலைகள் ஆகிய மூவகைப் பிரிவிலும் இயங்கும் மானிடச் செயல்கள் யாவற்றிலும் இரண்டு வித அம்சங்கள் பொருந்தியுள்ளன. ஒன்று, ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்தது; மற்றொன்று, கல்வியின் அடிப்படையில் அமைந்தது. எனவே, இந்த யுகத்தின் அறை கூவல் ஆறுவிதமாக எழுகின்றன.

அவசரமாகவுள்ள பிரச்சினைகளை, அஃதாவது அறிவியல் பற்றியவற்றை, முதலில் ஏற்பது இயற்கை. எனவே, ஐ. நா. சபையின் பேரவை இவற்றை முதலாவதாகக் கவனித்தது. அணுவாற்றலிலிருந்து எழும் மின்னாற்றலைப் பற்றிய அறிவியல், கலையியல் பற்றிய அம்சங்களில் திட்டப்படுத்தி வரையறை செய்து கொண்டு செயலாற்றத் தொடங்கியது. 1954-ஆம் யாண்டில் கூடிய இக்கழகத்தின் மாநாட்டில் இம்முடிவு தீர்மானிக்கப்பெற்றது. இக்கழகத்தின் தலைமைஇயக்குநர்[1]ஐக்கிய நாடுகளுடன் முழு ஒத்துழைப்பை அளிப்பது, வாழ்வைப் பாதிக்கும் கதிரியக்க விளைவுகள்


  1. 45 தலைமைஇயக்குநர் - Director-General.