பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

அணுவின் ஆக்கம்



எதிர் மின்னியல்[1]பற்றியுமான கொள்கை, செயல் முறைப் பயிற்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென்று சிபாரிசு செய்கிறது. ஆனால், அணு உலைகளை இயக்குவது போன்ற அந்த உயர்ந்த பிரத்தியேகமான பயிற்சி புதிய பயிற்சிப் பள்ளிகளை நிறுவி அவற்றில் அளிக்கப்பெறல் வேண்டும் என்றும் கூறுகின்றது.

இந்த இரண்டு ஆராய்ச்சிகளும் உலகெங்குமுள்ள நாடுகளைப்பற்றியது ; ஆராய்ச்சியின் வளர்ச்சியையும் பற்றியது. இவை இரண்டும் இயற்கை அறிவியல்[2] துறைகளில் ஆராய்ச்சி முறையில் செயற்படவேண்டும் என்பது இக்கழகத்தின் நோக்கமாகும். இதற்குச் சற்று முன்னதாக, 1955-ஜூன் 10-ல் இக்கழகத்தின் ஆதரவில், ஐரோப்பிய அணுவியல் ஆராய்ச்சி நிலைய ஆலோசனை சபை[3]யொன்று அணுவியல் துறைகளில் ஆராய்ச்சியைத் தூண்டுவதற்காக நிறுவப்பெற்றது. இந்த ஆலோசனைச் சபை பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஸ்விட்ஸர்லாந்து, இங்கிலாந்து, யூகோசுலோவியா ஆகிய 12 நாடுகளின் அறிவியல் பிரதிநிதிகளைக் கொண்டது. இந்நாடுகள் தம்முடைய ஆற்றல் மூலங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு நிலையத்தில் அமைத்து மிக ஆற்றல் வாய்ந்த அணுத்துணுக்குகள், அணுக் கரு அமைப்பு, அண்டக் கதிர்களின் இயல்பு ஆகியவை பற்றி ஆராயும் விலை மிக்க நவீன கருவித் தொகுதிகளைத் தம்முடைய ஆராய்ச்சிப் பேராசிரியர்கட்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கும் கூட்டாகக் கிடைக்கச் செய்வதற்கு வேண்டிய வசதிகளைச் செய்தன. இந்த ஆராய்ச்சிகளுக்கும் ஆற்றல் தரும் அணு உலைகளுக்குமோ, அன்றி அணுவாற்றலை உபயோகப்படுத்தும் முறைகளுக்குமோ யாதொரு தொடர்பும் இல்லை. ஆனால், அவை அறிவின் எல்லைகளை எட்டிப் பிடிப்பதற்காக மேற்கொள்ளப்பெற்றவை. அவை நிச்சய-


  1. 48எதிர் மின்னியல்- electronics
  2. 49 இயற்கை அறிவியல் - natural science.
  3. 50 ஐரோப்பிய அணுவியல் ஆராய்ச்சி நிலைய ஆலோசனை சபை - European Council for Nuclear- Résearch.