பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னிணைப்பு-2

கலைச் சொற்கள் - விளக்கக் குறிப்பு

அணு (Atom): வேதியல் அமைப்பிலுள்ள அலகு ; தனியாக நிலைத்து நிற்கக்கூடிய வேதியல் தனிமத்தின் மிகச் சிறிய துணுக்கு. பல்வேறு முறைகளில் பல்வேறு எண்ணிக்கையுள்ள அணுக்கள் வேதியல் முறையில் அமைந்து வேதியற் சேர்க்கைப் பொருள்களின் அணுத்திரளேகளாகின்றன. பரிதிய அணுவின் குறுக்களவு ஓர் அங்குலத்தில் பத்து கோடியில் ஒரு பங்கைவிடக் குறைவு.

அணு - அடுக்கு (atomic pile): தகுந்த கட்டுப்பாடுடன் உட்கருப் பிளவு விளைவினே நிகழ்த்த உதவும் ஒரு சாதனம். இது அனுப்பிளவினால் ஆற்றலைப் பயனுள்ள வடிவில் மாற்றவும் கதிரியக்கப் பண்புகொண்ட ஒரிடத் தான்களைத் தயாரிக்கவும் உட்கரு-வினேகளைத் தூண்டவும் பயன்படும்.

அணு - எடை (atomic weight): இதை அணு நிறை என்றும் கூறுவர். ஒரு தனிமத்தின் அணுவிற்கும் ஒரு திட்டத் தனிமத்தின் அணுவிற்கும் உள்ள ஒப்பு நிறையே இது. ஒவ்வொரு பொருளின் எடையையும் அதிலுள்ள அணுத்திரளையின் எண்ணிக்கையால் வகுத்தால் அனுஎடை கிடைக்கும்.

அணு - எண் (atomic number): ஒரு பொருளின் அணுவிலுள்ள நேர் இயல் மின்னிகளின் எண்ணிக்கையே இது.

அணு - உலை (reactor): இதில் அணு எரியைகள் தொடர்நிலை இயக்கம் பெற்று ஆற்றலே வெளிவிடும். அணு உலையில் ஓர் உள்ளகம், ஒரு தணிப்பான், கட்டுப்படுத்தும் கோல்கள், குளிர்ப்பான், காப்புறை ஆகியவை அடங்கியிருக்கும்.