பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

அணுவின் ஆக்கம்


துச் செல்லுவது அதிக மின் அழுத்தத்தில் அதிகமாகும் : அது அவை தாக்கும் பொருளின் செறிவையும் பொறுத்தது. அவை மானிட உடல் உட்பட பொருள்களின் உள்ளமைப்பைப்பற்றிய நிழற் படங்களை எடுக்கப் பயன்படுத்தப் பெறுகின்றன. கி. பி. 1895.ல் தற்செயலான டபிள்யூ. சி. ராண்ட்ஜெனின் [1], இக்கதிர்க் கண்டுபிடிப்பு 1896-ல் பெக்குரலின் இயற்கைக் காமா-கதிர்களின் கண்டுபிடிப்பிற்கு வழியமைத்துத் தந்தது; அதனால் குயூரித் தம்பதிகளின் ரேடியம் கண்டுபிடிப்பிற்கும் வழிகாட்டியது. ரேடியக் கண்டுபிடிப்பு அணுவின் உள்ளமைப்பைத் துலக்கமடையச் செய்ததுடன் அணுவியலைப்பற்றிய அனைத்தையுமே விளக்க மடையச் செய்தது.

புளுட்டோனியம் (pluionium) : ஒர் அணு உலையில் யுரேனியம்-235 பக்குவிடுதலால் உண்டாகும் பொது இயல் மின்னிகளைக்கொண்டு யுரேனியம்.238 தாக்கப்பெறும் பொழுது உண்டாகும் 239 அணு-எடையைக்கொண்ட ஒரு வேதியற் தனிமம். இத் தனிமமே பக்குவிடும் தன்மையுடையது ; அது யுரேனியம்.285 உடன் சேர்ந்து இரண்டு முக்கிய எரியைகளாகின்றது. புளூட்டோனியம் இயற்கையில் கிடைக்கும் தனிமம் அன்று. காரணம், அதுவும் கதிரியக்கமுடையது ; 24,300 ஆண்டுகள் அரை-வாழ்வைக் கொண்டது. ஏதாவது தொடக்கத்தில் இருந்திருந்தால் அது காலப் போக்கில் சிதைந்தழிந்து மறைந்திருக்கக் கூடும்.

பொது இயல் மின்னி (neutron) : இது மின்சார சமனிலையிலுள்ள ஓர் அடிப்படைத் துணுக்கு ; சாதாரண நீரியக் கருவைத் (புரோட்டியம்-protium) தவிர எல்லா அணுக் கருக்களின் இயையுப் பொருளாக இருப்பது. இதன் எடை கிட்டத்தட்ட நேர் இயல் மின்னியின் எடைக்குச் சமமானது. ஒரிடத்தான்களிடம் காணப்பெறும் எடை வேற்றுமை பொது இயல் மின்னிகளால் ஏற்படுவது. பொது இயல் மின்னிகள் கரு பிளவுறுங்கால் வெளிப்படும் பக்கு-


  1. டபிள்யூ.சி.ராண்ட்ஜென்- W. C. Roentgen.