பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/343

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னிணைப்பு-2

27


விடுதலிலும் தொடர்நிலை விளைவுளிலும் முக்கிய பங்கு கொள்ளும்.

மோனசைட் (monazite): இது தோரியத்தின் முக்கிய கனிப்பொருள் (ore). இது அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள கரோலினா என்ற இடத்திலும், பிரேஸில், இலங்கை, குமரிமுனை ஆகிய இடங்களிலும் மஞ்சள்-கபில நிறமுள்ள மணலாகக் கிடைக்கின்றது.

வழி-துலக்கி (tracer) : சாதாரணமாக நிலைத்த ஒரு வேதியற் தனிமத்தின் கதிரியக்க ஓரிடத்தான். அது வலிவற்ற கதிர் வீச்சுக்களை வெளிவிடுபவை , சாதாரணமாக அது பீட்டா-கதிர்களையே வெளிவிடும். இக் கதிர்களை மிக நுட்பமான கருவிகளைக்கொண்டு துப்பறியலாம். இது தனிம நிலையில் இதன் சேர்க்கைப் பொருள்களுடன் கலந்து விட்டால் அது அதனை ஸ்தூல நிலையில் தொடர்வதோடன்றி எல்லா வேதியற் கிரியைகளிலும் தொடர்ந்து செல்லுகிறது. அதன் கதிர்களைக்கொண்டு அதனை மானிட உடலிலும், பிராணிகளின் உடலிலும் நடைபெறும் மிகச் சிக்கலான உயிரியல் கிரியைகள் உட்பட எல்லா வேதியற் கிரியைகளிலும் தொடர்ந்து செல்வதற்கு உபயோகப் படுத்தலாம்.

வாயு பரவுதல் (diffusion) : நேரிட்டபடி கலக்கும் ஒரு கிரியை. இதில் ஒரு வாயுவின் அல்லது திரவத்தின் அணுத்திரளைகள் வேருெரு வாயுவின் அல்லது திரவத்தின் அணுத் திரளைகளினூடே அலைந்து திரிவது. இதில் அமுக்க வேற்றுமையே இல்லை ; சூட்டு நிலையினால் மட்டிலும் தூண்டப் பெறும். எனவே, ஓர் அறையிலுள்ள காற்றில் விடுவிக்கப் பெறும் வாயு காற்று முழுவதும் பரவி விடும். ஏதாவது ஒரு குறிப்பிட்ட சூட்டுநிலையில் தூண்டப்பெறுவதன் வேகம் அதிகப் பொருண்மையுள்ள அணுத்திரளைகளிலிருப்பதை விட குறைந்த பொருண்மையுள்ள அணுத்திரளைகளில் அதிகமாக இருக்கும். இதனை அடிப்படையாகக் கொண்டே சிறிய துவாரங்களின் வழியாக ஓரிடத்தான்கள் வாயு பரவுதல் மூலம் பிரிக்கப்பெறுகின்றன.