பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவின் அமைப்பு

19




என்ற நகர் கலிபோர்னியா27 மாகாணத்திலுள்ளது. கலிபோர்னியப் பல்கலைக் கழகத்தின் கதிரியக்க ஆய்வகம் 28 ஆங்கு அமைக்கப்பெற்றிருக்கின்றது.

இந்த ஆராய்ச்சியில் பெரும்பாலும் ஐரோப்பியரே ஈடுபட்டனர். ஆதலின், அவர்கள் தங்களுக்குப் பொதுவான இலத்தீன் பெயரையே பல பொருள்களுக்கு இட்டனர். உலக வழக்கு மொழியிலுள்ள பெயர்களை இட்டால் அவை வேறு பிறவற்றையும் குறிக்கக் கூடுமென்று கருதியே வழக்கிலில்லாத இலத்தீன்பெயரை இட்டனர். அப்பெயர் கிணற்றிலிட்ட கல் போல் சிறிதும் இடம் மாறாது இட்ட இடத்திலேயே கிடந்து பிற பொருளை உணர்த்துவதற்குப் போகாது. இப் பெயர்களில் முழுப்பெயராக எழுதுவது பெரு வழக்கில் இல்லை. செட்டிநாட்டில் மக்களுக்குப் பெயர்கள் தலை எழுத்தினைக் கொண்டு வழங்கப்பெறுவது போலவே, இப் பொருள்களின் பெயர்களும் வழங்கப் பெறுகின்றன. பெயர்களின் முதல் எழுத்தையே அப்பெயர்களுக்கு அறிகுறியாக எழுதுவது வழக்கம். இரண்டு மூன்று பொருள்களின் பெயர்கள் ஒரே எழுத்தில் தொடங்கினால் முதல் இரண்டு எழுத்துக்களை எழுதுவர். கார்பனை (கரி) 'C' என்றும், நைட்டிரஜனை 'N' என்றும் எழுதுவர். ஆனால், கால்சியத்தையும் நிக்கலையும்" முறையே 'ca’ என்றும் 'Ni’ என்றும் இரண்டு எழுத்துக்களை அறிகுறியாக எழுதுவர். குறியீடுகள் 1, 2, 3.என்ற எண் குறியீடுகளைப் போலவே உலகம் முழுவதிலும் வழங்கும் குறியீடுகளாகும். இவை எல்லா நாட்டினர்க்கும் பொதுச் சொத்து. எனவே, நாமும் இந்தக் குறியீட்டினையே வழங்குதல் தக்கது.

பொருள்களின் வாய்பாடு30 இவ்விடத்தில் இன்னொரு செய்தியையும் அறிதல் இன்றியமையாதது. இந்த அடிப்படைப் பொருள்கள் யாவும் பெரும்பாலும் சேர்க்கைப் பொருள்களாகவே கிடைக்கின்றன. இவற்றின் அணுக்


27கலிபோர்னியா-California, 28கதிரியக்க ஆய்வகம்-Radiation Laboratory. 28நிக்கல் - nickel. 90வாய்பாடு - formula.