பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அணுவின் ஆக்கம்


உட்கரு : ஓர் அணுவின் எடை முழுவதும் அதன் உட் கருவில் செறிந்திருக்கின்றது. அதில் நேர் இயல் மின்னிகளும் பொது இயல் மின்னிகளும் கலந்திருக்கின்றன. இரண்டும் எடையில் சமமானவை என்று அறிவியலறிஞர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். நேர் இயல் மின்னிகள் நேர் மின்னூட்டம் பெற்றவை ; பொது இயல் மின்னிகளிடம் மின்னூட்டம் ஒன்றும் இல்லை. ஆகவே, அதனை நேர் இயல் மின்னியும் கவர்வதில்லை ; எதிர் மின்னியும் கவர்வதில்லை ; வெறுத்துத் தள்ளுவதும் இல்லை. பொது இயல் மின்னி கருவில் இருப்பதால் மின்னூட்டம் மிகுதிப்படுவதுமில்லை. ஒரு கருவினுள் நேர் இயல் மின்னியோ எதிர் மின்னியோ வந்தால் மின்னூட்டம் மாறும் ; பொது இயல் மின்னி வந்தால் அது மாறுவதில்லை. பொது இயல் மின்னியின் வருகையால் அணுவகையும் மாறுவதில்லை ; ஆனால், அணுவின் எடையில் மட்டிலும் மாற்றம் நிகழ்கிறது.

நீரிய அணுவின் குறுக்களவு ஓர் அங்குலத்தில் பத்துக் கோடியில் ஒரு பங்கைக்காட்டிலும் குறைவானது. ஆனால், அணுக்கருவின் குறுக்களவு இதில் 20,000-ல் ஒரு பங்குதான். அஃதாவது, உட்கருவின் குறுக்களவினைக் காட்டிலும் அணுவின் குறுக்களவு 20,000 மடங்கு பெரிது. எதிர்மின்னியின் குறுக்களவு அணுவின் குறுக்களவில் ஐம்பதாயிரத்தில் ஒருபங்கு, நேர் இயல் மின்னியின் குறுக்களவு எதிர் மின்னியின் குறுக்களவில் இரண்டா யிரத்தில் ஒரு பங்கு. எதிர்மின்னியின் பொருண்மை9x1-27 கிராம். நேர் இயல் மின்னி இதனினும் 1840 மடங்கு கனமுள்ளது. எடையிற் பெரிய கரு எடையிற் சிறிய எதிர்மின்னியைவிட இட அளவில் சிறிதாக இருப்பது ஒரு வியப்பு. அணுவின் பொருள் - திணிவு முழுவதும் அதன் உட்கருவிலேயே அடங்கிக் கிடக்கின்றது ; அஃதாவது, அணுவின் கரு மிக அழுத்தமாகக் கட்டுண்டு கிடக்கின்றது. இதனைச் சில எடுத்துக் காட்டுக்களால் விளக்குவோம். ஓர் அணுவின் அளவினைப் பெரிதாக்கி அதன் பரப்பை இருபது மீட்டர் விட்டமுள்ள வட்டத்தில் குறிப்பிட்டால், அப்பொழுது ஒரு மில்லி மீட்டரில் பத்தில் ஒரு