பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுவின் அமைப்பு

31


களில்களில் அமைந்திருக்கின்றன. உட்கருவிற்கு மிகவும் அருகிலுள்ள மண்டலத்தில் இரண்டு எதிர் மின்னிகள் இருக்கக் கூடும். புகை வண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில்55 இரண்டுபேர் உட்காருவதற்கு ஏற்றபடி வசதிகள் அமைந்திருக்கும். அந்தப் பெட்டியில் ஒருவர் ஏறிக்கொள்ளலாம். அல்லது இருவர் உட்காரலாம். அதற்குமேல் இருக்கக் கூடாது. மூன்றாவதாக ஒருவர் வந்தால் அவர் வேறொரு பெட்டியில்தான் போய் ஏறவேண்டும். அணுவில் அம்முறையில் அமைந்த இரண்டாவது மண்டலத்தில், புகை வண்டியின் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் எட்டு பேர் இருப்பதற்கு இடம் இருப்பதுபோலவே, எட்டு எதிர் மின்னிகள் இருக்கக் கூடும். அதற்கு அடுத்த மூன்றாவது சுற்றிலும், சில மூன்ரும் வகுப்புப் பெட்டியிலிருப்பது போல, எட்டு எதிர் மின்னிகளுக்குமேல் இருக்க முடியாது. ஆனால், ஏனைய சுற்றுக்களிலெல்லாம், மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் திருவிழாக் காலங்களில் மக்கள் கணக்கிற்குமேல் ஏறிச் செல்வதைப் போல், எட்டு எதிர் மின்னிகளுக்கு மேலும் இருக்கலாம்.

இதையே இன்னொரு எடுத்துக்காட்டால் விளக்கலாம். கோவிலின் கருப்பக் கிருகத்தில் பெருந் தெய்வம் அமர்ந்திருக்கும். அதைச் சுற்றி, சிறிதான முதல் பிராகாரத்தில் இரண்டொரு தெய்வங்களின் விக்கிரகங்கள் அல்லது உருவச்சிலைகள் இருக்கும். அடுத்த பிராகாரத்தில் சில தெய்வங்கள் இருக்கக்கூடும். அதற்கு அடுத்த பிராகாரத்திலும் அவ்வாறே இருக்கும். வெளிப் பிராகாரத்திலோ பல தெய்வங்களின் விக்கிரகங்கள் வைத்திருக்கக் காணலாம்: அணுவின் அமைப்பிலும் இவ்வாறே எதிர் மின்னிகள் பல் சுற்றுக்களில் அமைந்திருக்கின்றன.

மண்டலக் கணக்கு: இந்த எதிர் மின்னிகள் பல வட்டங்களில் அமைந்திருப்பது ஓர் ஒழுங்கில்தான் இருக்கின்றது. கருவினுக்கு அடுத்த வட்டத்தில் 2 எதிர் மின்னிகள் உள்ளன. இரண்டாவது வட்டம் 8 எதிர் மின்னிகளைக்


55 முதல் வகுப்புப் பெட்டி - first class compartment.