பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



36

அணுவின் ஆக்கம


கூறப் பெறுகின்றது. மேலுள்ள எடைகள் யாவும் முழு எண்ணாக இருக்க, இது மட்டிலும் பின்னமாக இருப்பதற்குக் காரணம் என்ன ? இந்த இம்மிக் கணக்கில்தான் உலகமே அடங்கிக் கிடக்கின்றது. இதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்குவோம். இருநி64 என்பது ஒரு நேர் இயல் மின்னியும் ஒரு பொது இயல் மின்னியும் சேர்வதால் உண்டாகும் ஒர் எளிமையான அமைப்பினைக் கொண்ட ஒரு நீரிய உட்கரு. ஒரு நேர் இயல் மின்னியின் எடை 1.00813. ஒரு பொது இயல் மின்னியின் எடை 1.00895. இவை இரண்டின் மொத்த எடை 2.0171 ஆக இருக்கவேண்டும். ஆனல், இவை இரண்டும் ஒன்றாக இணைந்த இருநியின் எடை 2.0147 தான். எடையில் 0.0024 காணப்பெறவில்லை. பொருண்மையில் 0.0024 எங்கோ மறைந்துவிட்டது. இது 2.2 ஆயிரமாயிரம் எலக்ட்ரான் வோல்ட்டுக்குச்65 சமம்; அஃதாவது, 2,200,000 வோல்ட்டுக்களின் ஆற்றலுக்கு ஈடானது. ஒருநேர் இயல் மின்னியும் ஒரு பொது இயல் மின்னியும் இருநியாக ஆகும் பொழுது விடுவிக்கப் பெறும் ஆற்றல்தான் இது. மேலே கூறியபடி இந்த இரண்டு துணுக்குகளையும் பிரிக்க வேண்டுமாயின், அவற்றிலிருந்து விடுவிக்கப் பெறும் ஆற்றலே மீண்டும் அளித்தாக வேண்டும். அஃதா வது, அணுவின் உட்கருவிலுள்ள துணுக்குகள் ஒன்றாக


64 இருநி- deuteron.

65எலக்ட்ரான் - வோல்ட்டு : ஒர் எதிர்மின்னி ஒரு வோல்ட்டு மின் அழுத்த வேற்றுமையில் (potential difference) செல்லுங்கால் பெறும் ஆற்றலின் அளவு. இதனை 'dv' என்ற குறியீட்டால் வழங்குவர். அணுக்கருவிலுள்ள துணுக்குகளின் பிணைப்பாற்றல் இதைவிடப் பத்து இலட்சம் மடங்கு பெரிது. அணுவியலில் இந்த அளவின் பத்து இலட்சம் மடங்கு அளவைக் கையாளுவதே வழக்கமாக இருந்து வருகிறது. 10 இலட்சம் ev = 1 Mev. ஒரு Mev என்பது ஒரு துணுக்கு 10 இலட்சம் வோல்ட்டு மின் அழுத்த வேற்றுமையினிடையே செல்லுங்கால் ஏற்றுச் செல்லும் ஆற்றலின் அளவாகும்.