பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



33

அணுவின் ஆக்கம்

இரண்டு எடுத்துக்காட்டுக்கள் : சில எடுத்துக்காட்டுக்களால் இது நன்கு புலனாகும். இரண்டு காகிதங்களே ஒட்டுவதற்குத் திரவமாகக் கரைத்த கோந்து பயன்படுகின்றது. அவற்றிலுள்ள ஈரம் உலர்ந்ததும் அவை வன்மையாக ஒட்டிக்கொள்ளுகின்றன. அ வ் வி ர ண் டு காகிதங்களை மீண்டும் பிரிக்க வேண்டுமாயின், அவற்றை நனைத்தாக வேண்டும். அஃதாவது, ஆவி உருவத்தில் அவற்றினின்றும் அகன்ற நீரை மீண்டும் அக்காகிதங்களுக்கு அளித்தாக வேண்டும். அவற்றை நனைப்பதற்கு வேண்டிய மிகக் குறைந்த அளவுள்ள நீரே அவ்விரண்டு காகிதங்களேயும் ஒட்டுவதற்குப் பயன்பட்ட ஆற்றல் என்று உத்தேசமாகக் கூறலாம். இதே அளவு நீர்தான் கோந்து காகிதங்களே ஒட்டினபோது ஆவியாக மாறிற்று. இன்னுமோர் எடுத்துக் காட்டினைக் கூறுவோம். காசுக் கடைச் செட்டியார் ஒருவர் நகையை அடமானமாக வாங்கிக் கொண்டு கடனாகப் பணம் தருகிறார், செட்டியாரையும் நகையையும் பிரிக்க வேண்டுமானல், கடனாக வாங்கிய தொகை முழுவதையும் அவருக்குத் திரும்பக் கொடுத்து விடவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அவர் கடன் கொடுத்த தொகை-அஃதாவது, அவருடைய கையை விட்டுச் சென்ற தொகை-பெரிதாயிருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அவர் தம் கைக்கு வந்து சேர்ந்த நகையை விடாப் பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பார். இங்கே செட்டியாரையும் நகையையும் பிணைத்த ஆற்றல் பணம். அதுபோலவே, அணுவின் உட்கருவில் துணுக்குகளைப் பிணைத்த ஆற்றல்தான் மறைந்த ஆற்றல், இவ்வாறு மறைந்த ஆற்றல்தான் அணுகுண்டின் திருவிளையாடலில் பங்கு கொண்டது. ஹிரோஷிமா, நாகஸாகி என்ற ஜப்பான் நகரங்களே நாசமாக்கியது. பின்னக் கணக்கில் எழுந்த அணுகுண்டு இரு நகரங்களைச் சின்னபின்னப் படுத்தி விட்டது : கருவிலடங்கிக் கிடக்கும் ஆற்றலை அடுத்து வரும் அத்தியாயத்தில் காண்போம்.