பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. ஆற்றல்




பின்னக் கணக்கில் எழுந்த ஆற்றலை (energy) மேலே கண்டோம். அதைக் கண்டபின் ஆற்றலைப்பற்றி ஒரளவு தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற குறுகுறுப்பு நம்மிடையே உண்டாகிறது ; அறிவுத் தினவு எடுக்கிறது. ஆற்றல் என்பது என்ன ? ஆற்றல் என்பது சக்தி. ஆற்றல் என்ன என்பதைச் சொற்களால் வரம்புகட்டி உணர்த்த முடியாது. காரணம், அது உருவப் பொருள் அன்று : அருவப் பொருள். சடப் பொருளைப்போல் அதனைக் கண்ணால் காணுதல் ஒண்ணாது. அது செயற்படுவதிலிருந்தே அதனை அறிந்து கொள்ள இயலும். ஆற்றல் செயற்படாத இயக்கங்களும் இல்லை ; நிகழ்ச்சிகளும் இல்லை. நெருப்பு, எரிக்கும் ஆற்றலினால்தான் எரிகிறது ; இவ்வித ஆற்றல் இயற்கையான ஆற்றல். நீர் முதலியவை விதையை முளைக்கும்படி செய்கின்றன. இவ்வாற்றல், செயற்கையானது. இவை உலகப் பொருள்களில் காணக் கிடக்கும் நடைமுறையிலுள்ள ஆற்றல்கள். ஆற்றலின்றி இவ்வுலகம் இயங்காது; கோள்கள் இயங்கா. இவ்வுலகிலுள்ள தொழில்கள் யாவும் நடைபெறா. எந்தத் தொழில் செய்வதற்கும் ஆற்றல் வேண்டும். நாம் நடப்பதற்கு, ஒடுவதற்கு, மூட்டை தூக்குவதற்கு, இன்னும் இன்னோரன்ன பிறகாரியங்களுக்கு ஆற்றல் வேண்டும். இவற்றை யெல்லாம் கூர்ந்து நோக்கினால் ‘எல்லாம் ஆற்றல் மயம்’ என்பது தெள்ளிதின் புலனாகும். ஆற்றலின் தத்துவத்தை நன்-