பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

அணுவின் ஆக்கம்


குணர்ந்த நம் நாட்டவர் ‘சக்தி வழிபாடு’ என்ற ஒருவகை ஆண்டவன் வழிபாட்டினையே வளர்த்துள்ளனர். சக்தி வழிபாட்டினில் திளைத்த பாரதியார்,

ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர்
ஒண்மைகொண் டார்உயிர் வண்மை கொண்டார்

என்று கூறியிருப்பது ஈண்டு சிந்தித்தற்குரியது. இவ்வுலக நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து நோக்கிய பாரதியின் கவிதையுள்ளம் ஆற்றலின் இருப்பிடத்தை யெல்லாம் நன்கு உணர்ந்தது. அடியிற் கண்ட பாடல்கள் அவ்வுள்ளத்திலிருந்து மலர்ந்தன.

பரிதி யென்னும் பொருளிடையேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை :
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,
காலு மின்னென வந்துயிர் கொல்லுவை :
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை,
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை ;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
வெல்க காளி யென தம்மை வெல்கவே.

வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை :
தேயு வாகி ஒளியருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை ;
பாயு மாயிரஞ் சத்திக ளாகியே,
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை :
சாயும் பல்லுயிர் கொல்லுவை, நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.

நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை :