பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றல்

43



கொண்டு இருபது அடி உயரமுள்ள ஒரு மாடி வீட்டிற்கு எட்டு வினாடியில் ஏறுகிறார். அப்பொழுது அவர் செய்த வேலை 110x20 = 2200 இராத்தலடிகள். அஃதாவது, அவர் வினாடிக்கு 275 இராத்தலடிகள் வேலை செய்கிறார், இது அரைக் குதிரைத்திறன் ஆகிறது. பலம் மிக்க ஒரு மனிதரின் மிக உயர்ந்த விசை இரண்டேகால் குதிரைத் திறனுக்குச் சமம். ஆனால், அவர் இந்த விசையுடன் சிறிது நேரந்தான் வினையாற்ற முடியும்; விரைவில் களைப்பு ஏற்பட்டு விடும். மிதிவண்டி, படகு வலித்தல் போன்ற செயல்களை நீண்டநேரம் செய்யும்பொழுது காற் குதிரைத் திறனுக்குமேல் அவர் வினையாற்ற இயலாது.

சடத்துவம்[1] : நமது வேலைகளில் குறுக்கிடும் மற்ரறோர் ஆற்றல் பொருள்களிடையே அமைந்திருக்கும் சடத்துவம் ஆகும். ஒரு பொருள் தன் நிலையில் மாறுதல் நிகழ்வதை எதிர்க்கும் பண்பு அதன் சடத்துவம் எனப்படும். எல்லாப் பொருள்களிடத்தும் இப் பண்பு உள்ளது. அசைவற்ற நிலையிலிருக்கும் ஒரு பொருள் தன்மீது ஒரு விசை[2] தொழிற் பட்டாலன்றித் தனது அசைவற்ற நிலையிலேயே இருக்க முயலும். சீரான கதியோடு (நேர்வேகத்தோடு)[3]இயங்கும் பொருள்களும் தம்மீது வேறு விசை செயற்பட்டாலன்றித் தாம் இயங்கும் நிலையிலேயே இருக்க முயலும். சில எடுத்துக்காட்டுக்களைக்கொண்டு இவற்றை விளக்குவோம். ஒடுகிற புகை விண்டியிலிருந்து நாம் இறங்கும்பொழுது நமது கால்கள் தரையைத் தொட்டவுடன் தரை அவற்றின் இயக்கத்தைத் தடுத்து அவற்றின் வேகத்தைச் சூன்யமாக்கி விடுகிறது. ஆனால், உடம்பின் மேற்பாகம் மட்டிலும் அவ்வாறு தடுக்கப் பெறாததால் அது வண்டி செல்லும் வேகத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதனால் நாம் முன்னே சாய்ந்து கீழே விழ ஏதுவாகிறது. ஆகவே, இதைத் தவிர்க்கும் பொருட்டு நாம் சற்று முன்னோக்கி ஓடியோ அல்லது பின்னோக்கிச் சாய்ந்தோ கீழே விழாமல் தப்பித்துக் கொள்ளுகிறோம், இது போலவே, ஒடிக்கொண்டிருக்கும் புகை வண்-


  1. சடத்துவம் - inertia
  2. விசை - force
  3. கதி (நேர்வேகம்)—velocity