பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அணுவின் ஆக்கம்

டியில் நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும்பொழுது வண்டி சட்டென்று நின்று விட்டாலும் நமக்கு இதே சங்கடம்தான் ஏற்படுகிறது. வண்டி சட்டென்று நின்றவுடன் வண்டியின் அடித்தளமும் நமது உடலின் அடிப்பாகமும் நின்று விடுகின்றன, உடலின் மேற்பாகம் மட்டிலும் முன்னோக்கிச் செல்ல முயலுவதால், நாம் வண்டி ஓடிய திசையிலேயே முன்னோக்கிச் சாய்கின்றோம். ஒரு மாட்டுவண்டியில் அளவுக்கு மீறி சாமான்களை ஏற்றி விட்டால், மாடுகள் அவ்வண்டியை இழுக்க முடியாது திணறுவதைக் காண்கின்றோம். இதுவும் பொருளின் (சமான்கள் உட்பட வண்டியின்) சடத்துவத்தினால் ஏற்பட்ட விளைவுதான். நிறை அதிகமானால் அவற்றிற்கு இயக்கத்தை உண்டாக்குவது மிகக் கடினமாகி விடுகின்றது. மிகக் கனத்த உடலைக் கொண்ட மக்கள் எளிதில் அங்குமிங்கும் ஒடியாடித் திரிய இயலாத நிலையில் இருப்பதற்கும் இதுவே காரணமாகும்.

அணுவாற்றல் : நாம் செய்யும் வினைகளில் குறுக்கிடும் மூன்றுவது ஆற்றல் அணுவாற்றல். பொருள்கள் யாவும் அணுக்களால் ஆனவை. இவ்வணுக்களிடையே தோன்றும் கவர்ச்சி ஆற்றல்களினால்தான் பொருள்களின் குணங்கள் வேறுபடுகின்றன. எடுத்துக் காட்டாக, கற்கண்டினை வெகு எளிதாகச் சிதைத்துப் பொடியாக்கிவிட முடிகிறது; ஆனால், இரும்புத் துண்டை அவ்வாறு செய்ய முடிகிறதில்லை. ஒரு மரத்துண்டின் மேற்பட்டையைக் கத்தியைக் கொண்டு எளிதாகச் சீவி விட முடிகிறது ; ஆனால், ஓர் உலோகத்துண்டை அங்ஙனம் செய்ய முடிகிறதில்லை. இதற்குக் காரணம் என்ன ? ஒவ்வொரு பொருளிலும் அணுக்களிடையேயுள்ள கவர்ச்சியாற்றல் ஒவ்வொரு வித மாக இருக்கின்றது. ஒரு பொருளின் வடிவத்தையோ பரு மனையோ மாற்றுவதற்கு இவ்வணுக் கவர்ச்சியினை எதிர்த்து வினையாற்ற வேண்டியுள்ளது. இவ்வாறு செய்துதான் வாழ்க்கைக்கு வேண்டிய எண்ணற்ற மரச்சாமான்களையும் உலோகச் சாமான்களையும் பயன்படுத்தி வருகின்றோம்.

நான்காவதாக நாம் போராடி எதிர்த்துவரும் ஆற்றல் இயந்திர சகாப்தத்தினால் ஏற்பட்ட விளைவு.